• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தோனி அடித்த வின்னிங் ஷாட்: பாராட்டி ட்வீட் போட்டுட்டு 'உடனே' டெலிட் செய்த விராட் கோலி! ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய குவாலிபையர் ரவுண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வின்னிங் ஷாட் அடித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

  Practice-ல் செய்த சம்பவம்.. Csk vs Dc போட்டியில் Dhoni Form-க்கு திரும்பியது எப்படி ?

  2 பந்துகள் மிச்சமிருந்தபோது, தோனி பவுண்டரியுடன் வெற்றி இலக்கை எட்டச் செய்தார். வெறும் 6 பந்துகளில் 18 ரன்களை குவித்து சிங்கம் போல கர்ஜித்து களத்தில் நின்றார் தோனி.

  ஓகே.. அடுத்து இதுதான் வேலை.. சாட்டை துரைமுருகன் கைதை அடுத்து.. எம்பி செந்தில்குமார் தந்த க்ளூ! ஓகே.. அடுத்து இதுதான் வேலை.. சாட்டை துரைமுருகன் கைதை அடுத்து.. எம்பி செந்தில்குமார் தந்த க்ளூ!

  தோனி வெற்றிக்கான ரன்களை அடிப்பது என்பது பிற பேட்ஸ்மேன்கள் சிங்கிள் ஓடுவதை போல. அத்தனை முறை ரசிகர்கள் பல காலமாக இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர்.

  பல தரப்பட்டவர்களும் வாழ்த்து

  பல தரப்பட்டவர்களும் வாழ்த்து

  அதேநேரம், சமீப காலங்களாக, குறிப்பாக இரு வருடங்களாக தோனி பேட்டிலிருந்து பந்து சீறிப் பாய்வதில்லை. இந்த நிலையில்தான் நேற்று அவர் தனது வின்டேஜ் தோனி அவதாரத்தை காண்பித்தார். இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் ஜாம்பவான்கள் மட்டுமல்ல, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்தி தள்ளினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி வெற்றிக்கான ரன்களை அடித்தால் எந்த மாதிரி வரவேற்பு இருக்குமோ அப்படி வரவேற்பு அனைத்து தரப்பாலும் உற்சாகத்தோடு தரப்பட்டது.

  தியேட்டரிலும் எதிரொலித்த தோனி பெயர்

  தியேட்டரிலும் எதிரொலித்த தோனி பெயர்

  டாக்டர் என்ற சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படத்தை பார்க்கச் சென்ற ரசிகர்களில் பலர் கூட தியேட்டரில் படத்தை பார்ப்பதை விட்டு விட்டு செல்போனில் மேட்ச்சை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தோனி வெற்றிக்கான ரன்னை அடித்ததும், தியேட்டர் என்பதை கூட மறந்து, தோனி.. தோனி.. தோனி.. என்று கூட்டமாக ஆரவார கோஷங்களை எழுப்பினர். பல திரையரங்குகளில் நேற்று இவ்வாறு நடந்துள்ளது, அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

  அரசன் வந்து விட்டார்

  அரசன் வந்து விட்டார்

  இதன் உச்சகட்டமாக, ஐபிஎல் தொடரில் எதிரணியான ஆர்சிபியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியும், தோனியை பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார். "Anddddd கிங் மீண்டும் வந்து விட்டார், இந்த விளையாட்டில் எப்போதுமே சிறந்த பினிஷர் அவர். எனது இருக்கையை விட்டு மீண்டும் ஒருமுறை இன்று நான் துள்ளி குதித்து விட்டேன்." இவ்வாறு விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.

  ஆர்சிபி ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை

  ஆர்சிபி ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை

  இதை ஆர்சிபி ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை. போட்டித் தொடரே முடியவில்லை. ஒருவேளை சிஎஸ்கேவை நாம் பைனலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் விராட் கோலி இவ்வாறு புகழ்கிறாரே என்று சில ஆர்சிபி ஃபேன்ஸ் ஆதங்கம் தெரிவித்ததை பார்க்க முடிந்தது. ஆனால், இதுதான் விராட் பெருந்தன்மை என்று பலரும் தெரிவித்தனர்.

  டெலிட் செய்த விராட் கோலி

  டெலிட் செய்த விராட் கோலி

  அதேநேரம் இந்த ட்வீட் போடும் முன்பாக தோனி ஷாட் பற்றி கோலி ஒரு ட்வீட் வெளியிட்டார். உடனே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்தன. ஆனால் சட்டென்று அதை டெலிட் செய்து விட்டு இந்த ட்வீட் போட்டார். அதாவது வேறு ஒன்றுமே இல்லை. மீண்டும் அவர் போட்ட ட்வீட்டில் ever என்ற வார்த்தையை சேர்த்திருந்தார். முதலில் அதை சேர்க்கவில்லையாம். அதனால் டெலிட் செய்துள்ளார். எப்போதுமே அருமையான பினிஷர் தோனி என்பதற்கும் அருமையான பினிஷர் தோனி என்பதற்குமான வித்தியாசத்தை அந்த வார்த்தை தருகிறது. இதற்காக போட்ட ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு இன்னொன்று போட்டுள்ளார் விராட் கோலி.

  மாஸ் கூட்டணி

  மாஸ் கூட்டணி

  அப்படியானால் அவருக்கு தோனி மீது எந்த அளவுக்கு வெறித்தனமான அன்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விராட் கோலி டெலிட் செய்ததும், தோனியை பாராட்ட கூடாது என்றுதான் டெலிட் செய்து விட்டார் என்று சில சிஎஸ்கே ரசிகர்கள் கூட கூறினர். ஆனால் ever என்ற வார்த்தையை சேர்த்து கோலி போட்டதும், அப்படியே உருகிப் போய்விட்டனர் ரசிகர்கள். சும்மாவா சொன்னார்கள் கிங் கோலியும், பினிஷர் தோனியும் சேர்ந்தா மாஸுதான்.. எதிர்த்து நின்னா எவனும் தூசுதான்னு.

  English summary
  CSK vs DC: Why Virat Kohli has deleted a tweet which praising CSK Captain MS Dhoni and tweeted new one? here is the reason.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X