• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பரபரப்பில் சிஎஸ்கே.. நிற்பது தோனி.. கடைசி ஓவரை ஏன் ரபடா வீசவில்லை? ரிஷப் பந்த் எதிர்கொள்ளும் கேள்வி

Google Oneindia Tamil News

துபாய்: நேற்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின்போது சேஸிங் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, கடைசி ஓவரில் முன்னணி பவுலரான ககிசோ ரபடாவை பந்து வீசச் செய்யாமல், அனுபவம் குறைந்த டாம் கர்ரனை டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், வீசச் செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

  Dhonis cameo takes Chennai to final as CSK beat Delhi by 4 wickets |Oneindia Tamil

  ஐபிஎல் குவாலிபையர் ரவுண்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்களை எடுத்திருந்தது.

  2வது பேட் செய்த சிஎஸ்கே சீராக ரன் ரேட்டை பராமரித்தபடியே வந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் தாக்கூர், ராயுடு, ருத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானதால், சிஎஸ்கே அணிக்கு பிரஷர் அதிகரித்தது.

  அவர் ஏன் உள்ளே வந்தார்? தோனி மீது எழுந்த சந்தேகம்.. திருப்பி அடித்த தல.. கற்றுக்கொடுத்த 4 பாடங்கள்! அவர் ஏன் உள்ளே வந்தார்? தோனி மீது எழுந்த சந்தேகம்.. திருப்பி அடித்த தல.. கற்றுக்கொடுத்த 4 பாடங்கள்!

  கடைசி ஓவரை வீசிய டாம் கர்ரன்

  கடைசி ஓவரை வீசிய டாம் கர்ரன்

  இந்த நிலையில்தான், கடைசி ஓவரில் 13 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் களத்தில் மொயீன் அலியும், தோனியும் நின்று கொண்டிருந்தனர். ஆனால் கடைசி ஓவரை வீச வந்தது டாம் கர்ரன். ரபடாவிற்கு 1 ஓவர் பாக்கியிருந்த நிலையிலும், அவரை பந்து வீச அழைக்கவில்லை டெல்லி கேப்டன் ரிஷப் பந்த். அந்த ஓவரில் முதல் பந்தில் மொயீன் அலி அவுட்டானார். ஆனால் 3 பவுண்டரிகள் விளாசி சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் தோனி.

  ரபடாவுக்கு தராதது ஏன்

  ரபடாவுக்கு தராதது ஏன்

  இந்த நிலையில்தான் அனுபவம் வாய்ந்தவரும், உலகின் நம்பர் 1 பவுலர் என்று புகழப்படுபவருமான ரபாடாவை விட்டு விட்டு ஏன் டாம் கர்ரனுக்கு ஓவர் தரப்பட்டது. இந்த லாஜிக் புரியவில்லையே என சிஎஸ்கே தவிர்த்த பல அணி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். முன்னாள் வேகபந்து வீச்சாளர் இர்பான் பதானும் கூட இதே கேள்வியை ட்விட்டரில் எழுப்பியுள்ளார்.

  ரிஷப் பந்த் திட்டம்

  ரிஷப் பந்த் திட்டம்

  அதேநேரம், இதுபோன்ற முடிவுகள் சூழ்நிலைக்கு தக்கபடிதான் எடுக்க முடியுமே தவிர பவுலரின் சாதனைகளை வைத்து அல்ல என்பது ரிஷப் பந்த் ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது. கடைசி ஓவரை வீச வரும் முன்பாக டாம் கர்ரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 3வது விக்கெட்டை கடைசி ஓவரின் முதல் பந்தில் வீழ்த்தினார். எனவே ரிஷப் பந்த் நினைத்தபடிதான் நடந்தது. ஆனால் தோனியின் அனுபவம்தான் ஆட்டத்தை மாற்றியது.

  தோனி ஹெட்மாஸ்டர்

  தோனி ஹெட்மாஸ்டர்

  பவுலர் எங்கே பந்து வீசுவார் என்பதை கணித்து அதற்கு ஏற்ப அவர் கிரீசில் நின்றதை 3 பவுண்டரிகளின்போதும் கவனிக்க முடிந்தது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். மேலும் ரபடாவுக்கு எதிராக கடந்த காலங்களில் தோனியும், மொயீனும் சிறப்பாகவே ஆடியுள்ளனர். டாம் கர்ரன் அதிவேக பவுலர் கிடையாது. மீடியம் வேகம்தான், மேலும் ஸ்லோ பவுலிங்கும் அடிக்கடி போடுவார். எனவே தோனி அடிக்க திணறுவார் என்று ரிஷப் பந்த் கணக்கு போட்டிருக்கலாம். ஆனால் ரிஷப் பந்த் படித்த பள்ளியில், தோனி ஹெட்மாஸ்டர். அதனால் அனைத்து வியூகங்களையும் உடைத்து தூள் தூளாக்கி வெற்றிக்கான ரன்களை எட்ட வைத்து விட்டார் என்கிறார்கள் பல கிரிக்கெட் வல்லுநர்கள்.

  ரோகித் சர்மா செய்த வியூகம்

  ரோகித் சர்மா செய்த வியூகம்

  2019 ஐபிஎல் பைனலில் மும்பை வீரர் மலிங்கா நிறைய ரன்களை லீக் பண்ணியிருந்தாலும் கடைசி ஓவரை அவருக்குதான் வீச கொடுப்பார் கேப்டன் ரோகித் ஷர்மா. அதில் மும்பை வென்றது. அந்த மாதிரி பண்ட் கடைசி ஓவரை அனுபவ வீரர் ராபாடாவுக்கு குடுத்து இருக்கனும். இத்தனைக்கும் ரபடா விக்கெட் எடுக்கவில்லையே தவிர 3 ஓவர்களுக்கு 23 ரன்கள்தான் கொடுத்திருந்தார் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். அது ரபடாவோ, சாம் கர்ரனோ அல்லது வேறு யாரோ.. தோனி நேற்று ஒரு முடிவோடுதான் ஜடேஜாவுக்கு முன்பே களம் கண்டார். எனவே, காட்டாற்று வெள்ளம் போல வந்த அவரை அணை கட்டி தடுக்க யாராலும் முடிந்திருக்காது என்பதுதான் யதார்த்தம்.

  English summary
  CSK vs DC: Why Delhi Capitals captain Rishabh Pant asking to bowl the inexperienced Tom Curran instead of leading bowler Kagiso Rabada in the last over.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X