துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெண்டுல்கர், கோலி, தோனி.. 3 பேரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம் தெரியுமா? நெகிழும் கவாஸ்கர்

Google Oneindia Tamil News

துபாய்: சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை விட, மகேந்திர சிங் தோனிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர். சச்சினின் தீவிர ரசிகரான மும்பையை சேர்ந்த கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளதை தோனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடப்பு, ஐபிஎல் சீசன் தொடரில், தொலைக்காட்சி வர்ணனை செய்வதற்காக சுனில் கவாஸ்கர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கிருந்தபடியே டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது தோனி பற்றி சுனில் கவாஸ்கர் சுவையான ஒரு கருத்தை முன்வைத்தார்.

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக விமான சேவை.. எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும்?இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக விமான சேவை.. எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும்?

ராஞ்சி

ராஞ்சி

இப்ப பார்த்தீங்கன்னா, ராஞ்சி மாதிரி ஒரு சின்ன ஊரில் இருந்து தோனி கிரிக்கெட் உலகத்திற்கு வந்தார். ராஞ்சி நகரம் கிரிக்கெட் கலாச்சாரம் கொண்ட நகரம் கிடையாது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் தோனியை விரும்புகிறது.

இந்தியா முழுக்க ரசிகர்கள்

இந்தியா முழுக்க ரசிகர்கள்

சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஏராள ரசிகர்கள் உண்டு. விராட் கோலிக்கு, டெல்லி மற்றும் பெங்களூரில் ரசிகர்கள் அதிகம். ஆனால், தோனி என்று வந்துவிட்டால், ஒட்டு மொத்த இந்தியாவில், ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும், அவருக்கு ஆதரவு தெரிவித்து எழுந்து நிற்கும். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் பேட்டியை தோனி ரசிகர்கள் சிலாகித்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருவதைப் பார்க்க முடிகிறது.

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்கள்

தோனி கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியுடனான, தோல்வியுடன் நாடு திரும்பியவர்தான். அதன்பிறகு எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. 14 மாத கால ஓய்வுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்றுள்ளார். திரும்பி வந்த முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கண்டது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இத்தனை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பேட்டியளித்த தோனி, எனது குடும்பத்தாருடன் தொடர்ந்து பல மாதங்கள் செலவிட்டேன். அதன்பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஆறுநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். குடும்பத்தை விட்டு தனிமையில் இருப்பது கடினமான விஷயம்தான் என்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தோனி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunil Gavaskar says Mahendra Singh Dhoni has more fan bass then legendary Sachin Tendulkar and Indian captain Virat Kohli. "Being coming from a small town Ranchi, Dhoni got very huge fan support from across the India" says Sunil Gavaskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X