துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவான் செஞ்சுரி அடிக்கிறார்.. டி வில்லியர்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.. தோனி மொத்தமாக சொதப்புறார்!

Google Oneindia Tamil News

சார்ஜா: ஒன்று.. நேரம் கெட்ட நேரத்தில் லேட்டாக இறங்கி அடிக்காமல் கிளம்புகிறார்.. அல்லது, முன்கூட்டியே இறங்கினாலும் அடிக்காமல் கிளம்புகிறார்.. நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி ஆட்டம் இப்படித்தான் இருக்கிறது.

ஓராண்டு ஓய்வு.. பிறகு இந்திய அணியிலிருந்தும் ஓய்வு.. இப்போது எந்த டென்ஷனும் கிடையாது. எனவே சிஎஸ்கே அணிக்காக அடி தூள் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் தோனி. ஆனால், நிலைமை அப்படியில்லை.

டி20 போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெறுவதற்கான காலம் எப்போது கனிந்துவிட்டதை போலத்தான் இருக்கிறது அவரது ஆட்டங்களை பார்த்தால்.

சிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள் சிஎஸ்கே டீமுக்குள் மீண்டும் வந்த கேதர் ஜாதவ்.. என்னப்பா நடக்குது.. மீம்ஸ் தெறிக்க விடும் ரசிகர்கள்

தோனி ரன்களே இவ்வளவுதான்

தோனி ரன்களே இவ்வளவுதான்

3, 21, 10, 11, 47, 15, 29, 3, இதுதான், தோனி இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அடித்த ரன்கள். தவான் போன்ற, இந்திய அணியின் சக வீரர்கள் ஒரே போட்டியில், நூறு ரன்களை கடந்து, செஞ்சுரி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தோனி இதுவரை மொத்த போட்டியையும் சேர்த்தே 150 ரன்களை கூட கடக்கவில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும் பின்னடைவு.

எப்போது களமிறங்கினாலும்

எப்போது களமிறங்கினாலும்

ஒரு கட்டத்தில், லேட்டாக இறங்கி பிக்அப் ஆகுவதற்கு முன்பாக அணி தோன்றது. சமீப காலமாக, தோனி முன்கூட்டியே இறங்குகிறார். ஆனாலும், ரன் அடிக்காமல் நடையை கட்டுகிறார். இதற்காக அவர் ரன்களுக்கும் மேல் பந்துகளை எடுத்துக்கொள்கிறார். முக்கியமான மிடில் ஆர்டரில் தோனி இப்படிச் செய்யலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள்.

இன்றைய போட்டியிலும் சொதப்பல்

இன்றைய போட்டியிலும் சொதப்பல்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும், 5 பந்துகளுக்கு 3 ரன்கள்தான் எடுத்தார். எளிதாக கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஸ்ட்ரைக் ரேட் 60 மட்டுமே. சிஎஸ்கே அணியில் இன்றைய போட்டியில் இவ்வளவு குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தது தோனிதான். ஜடேஜா அதிகபட்சமாக 253 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் தோனி, ஜடேஜாவுக்கும் முன்பே களமிறங்கியது கவனிக்கத் தக்கது.

தோனி திட்டம் என்ன?

தோனி திட்டம் என்ன?

தோனியை போலவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்தான் டிவில்லியர்ஸ். ஆனால் இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 22 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். அதில் சிக்ஸ் மட்டுமே 6. விராட் கோலியும் கலக்குகிறார், தவான் செஞ்சுரி அடிக்கிறார். ஆனால் தோனி..? வழிகாட்ட மட்டும் தான் போதும் என்று நினைத்தால், இனி 11வது வீரராக களமிறங்கட்டும். அல்லது ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிடட்டுமே!

English summary
CSK captain Dhoni once again didn't score much runs, he completely no clue over his form.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X