துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்

Google Oneindia Tamil News

துபாய்: அம்பயர் வைடு காட்டுவதற்காக கையை விரிக்க முயல, தோனி அதைப் பார்த்து கடும் கோபம் கொள்ள.. பாதியிலேயே கையை மூடிக் கொண்டார் நடுவர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தான் இப்படி ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்தது.

19-வது ஓவரை தாக்கூர் வீசிக் கொண்டிருந்தார். அந்த ஓவரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அவர் அதற்கு முந்தைய ஓவரில் நல்ல அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த பிளேயர்.

போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.. வார்னரின் ஸ்பின் அட்டாக்கை உடைத்த சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்!

வைடு பந்து

வைடு பந்து

எனவே அவர் விளாசி விடுவார் என்பதற்காக பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்தப் பந்து வைடு என்பது தெளிவாக தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி நடுவர் வைடு கொடுத்து இருந்தார். இந்த பந்துக்கும் நடுவர் திரும்பி கையை அகலமாக விரித்து வைடு என்று சொல்வதற்கு முயற்சி செய்தார்.

தோனி கோபம்

தோனி கோபம்

அப்போது தோனி கடும்கோபம் கொண்டவராகக் காணப்பட்டார். முறைத்தபடியே நடுவரை பார்த்து ஏதேதோ சொன்னார். வைடு இல்லை என்பது போல கையை விரித்துக் காட்டினார். இதைப்பார்த்த நடுவர் அப்படியே வைடு கொடுக்காமல் திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டென்ஷன் ஆகி விட்டார். என்ன நடக்கிறது என்று கையை அகற்றி அதிருப்தி வெளிப்படுத்தினார்.

 முக்கிய திருப்பம்

முக்கிய திருப்பம்

ஆனால் அதில் வைடு வரவில்லை. 1 ரன்னும் போச்சு. ஒரு பந்து வீணானது. இது ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த ஓவரில் சிறப்பாக அடித்து இருந்தால், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சர்ச்சை காரணமாக ஹைதராபாத் அணி அடிக்க வேண்டிய ரன் இலக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்று இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

 வெற்றிக்கான வேகம்

வெற்றிக்கான வேகம்

தோனி வழக்கமாக மிகவும் கூல் கேப்டன் என்று அறியப்படுபவர். ஒரு சில நேரங்களில் மட்டும் இதுபோல மைதானத்தில் கடும் டென்சன் ஆவதை​ ​ ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதிலும் இன்றைய போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பு தோனியின் முகத்தில் காணப்பட்டது.

 தோனி உத்வேகம் தேவை

தோனி உத்வேகம் தேவை

இதற்கு முன்பும் சில ஓவர்கள் ஆகவே பவுலர்களிடம் கடுமை காட்டினார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. அந்த அளவுக்கு தீவிரம் காட்டியதால் தான் சென்னை அணி வெற்றி பெற்றது என்பது வேறு விஷயம். இதே முனைப்போடு இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணி விளையாடி வெற்றியை தட்டிப் பறிக்க வேண்டும் என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

English summary
Umpire has refused to give wide after Chennai super kings captain MS Dhoni showing angry against him. This incident happened the match played against sunrisers Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X