துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூலை 7 முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் துபாய்.. என்ன நடைமுறை?

Google Oneindia Tamil News

துபாய்: ஜூலை மாதம் 7ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க, துபாய் அரசு முடிவு செய்துள்ளது. துபாய் நாட்டின் குடியுரிமை விசா வைத்துள்ளோர், ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை முதல் அந்த நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட கெடுபிடிகள் துபாயில் குறைக்கப்பட தொடங்கியுள்ளன. இது குறித்து துபாய் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 22ஆம் தேதி முதல் துபாய் குடியிருப்பு விசா வைத்துள்ள வெளிநாட்டினர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக புதிய அறிவிப்பு அமைந்துள்ளது. எமிரேட் விமான நிலையங்கள் திங்கள்கிழமை (ஜூன் 22) முதல் குடியிருப்பாளர்களை திரும்ப பெறத் தொடங்கும் என்று துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை குழு நேற்று அறிவித்தது.

இத்தாலி டாக்டர் இப்படிச் சொல்றாரே.. நம்பலாமா.. நம்பி நிம்மதி அடையலாமா?இத்தாலி டாக்டர் இப்படிச் சொல்றாரே.. நம்பலாமா.. நம்பி நிம்மதி அடையலாமா?

பிற நாடுகளுக்கு பயணம்

பிற நாடுகளுக்கு பயணம்

ஜூன் 23ஆம் தேதி முதல் துபாய் குடியிருப்புவாசிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். அந்த நாடுகள் இவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இந்த பயணத்துக்கு துபாய் ஆட்சேபம் தெரிவிக்காது. அதேபோல ஜூலை 7ம் தேதி முதல், பிற நாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளை துபாய் அனுமதிக்கும்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

துபாய் குடியிருப்பு விசா வைத்துள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சுய அறிவிப்பு விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். மேலும் அவர்களது விமான சேவை நிறுவனம் இவர்களுக்கு அறிகுறி இருக்கிறதா என்பதைப் பார்த்து அழைத்து வருவதற்கும் அவர்களை அழைத்து வராமல் நிராகரிப்பதற்கு ம் அதிகாரம் கொண்டுள்ளது.

துபாய் விமான நிலையம்

துபாய் விமான நிலையம்

துபாய் விமான நிலையம் வந்ததும், அனைத்து பயணிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் குடியிருப்புவாசிகள் தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் ஆப் மூலமாக பதிவு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வெளியாகும்வரை குடியிருப்பாளர்கள், அவர்களின் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நிறுவன தனிமை

நிறுவன தனிமை

பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். ஒருவேளை நெருக்கமான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் குடியிருப்போராக இருந்தால், அல்லது தனிமை வசதியை ஏற்படுத்துவதற்கு போதிய வசதி இல்லாத வீட்டில் இருப்பவராக இருந்தால், அவர்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். இவ்வாறு துபாய் அரசு அறிவித்துள்ளது.

English summary
Dubai, the biggest destination for Indian travelers, will conditionally reopen its doors for tourists from July 7, 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X