துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... !

Google Oneindia Tamil News

துபாய் : பாகிஸ்தானில் ஒரு மாவட்டத்தில் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை அறிந்த இந்திய வம்சா வழியை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் அந்த மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் அகல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

துபாயில் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருபவர் ஜோகிந்தர் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். இதற்காகவே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பெஹல் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறார்.

dubai indian helps pakistani town to get water

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தர்பார்கர் மாவட்ட மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வருகின்றனர் என்பதை ஃபேஸ்புக் மூலமாக தெரிந்து கொண்ட ஜோகிந்தர் சிங் இவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார். இதற்காக பாகிஸ்தானில் உள்ளல சமூக ஆர்வலர்களை இவர் நாடியுள்ளார்.

பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம் பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம்

தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கங்கர் என்ற சமூக ஆர்வலரை தொடர்புகொண்ட ஜோகிந்தர் சிங், இதற்கான பணிகளை அவரிடம் ஒப்படைத்துள்ளார். தண்ணீரின்றி தவித்து 62 கிராமங்களுக்கும் கை பம்புகள் அமைக்க திட்டமிட்ட ஜோகிந்தர் சிங் ஒரு கிராமத்திற்கு ஒரு கை பம்பு அமைக்குமாறு பாகிஸ்தான் சமூக ஆர்வலர் கங்கரிடம் கூறியுள்ளார்.

பின்னர் 62 தண்ணீர் பம்புகள் அமைக்க தேவைப்படும் நிதியை அளித்து வேலையை தொடங்க செய்துள்ளார். இதனையடுத்து கிராமத்திற்கு ஒரு பம்புகள் வீதம் அம்மாவட்டத்தில் உள்ள 62 கிராமங்களுக்கும் கைப்பம்புகள் அமைக்கப்பட்டன.

தண்ணீர் தேவையை அடுத்து அப்பகுதி மக்களுக்காக உணவு தானியங்களையும் ஜோகிந்தர் சிங் அனுப்பியுள்ளார். இன்னொரு நாட்டு மக்களின் துயர் துடைக்க உதவிய ஜோகிந்தர் சிங்கின் செயலுக்கு சமூக வளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது

English summary
Dubai based Indian Joginder Singh has helped a Pakistani town to get water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X