துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலையை ஆரம்பித்த தோனி.. சிஎஸ்கே ஹோட்டலுக்கு வந்த பிசிசிஐ ஸ்பெஷல் டீம்.. என்ன நடக்கிறது? பிளான்?

Google Oneindia Tamil News

துபாய்: ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி ஒரு பக்கம் கலக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தோனி வேறு முக்கியமான சில பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் விறுவிறுபாக சென்று கொண்டு இருக்கிறது. கடந்த முறை ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே அணி இந்த முறை மிகவும் அதிரடி ஆடி ப்ளே செல்வதை உறுதி செய்து இருக்கிறது. தற்போது டேபிள் டப்பாராக சிஎஸ்கே உள்ளது.

3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி.. 3 மேட்டர்கள்.. 13 திமுக அமைச்சர்கள்.. அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி..

டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகளும் இந்த சீசனில் கொஞ்சம் நன்றாக ஆடி வருகிறது. சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும், இன்னொரு அணியும் ப்ளே ஆப் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

ஆலோசகர்

ஆலோசகர்

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தோனி இந்திய டி 20 உலகக் கோப்பை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. டி 20 கேப்டன்களிலும் மிக சிறப்பானவர். தோனியின் சமீபத்திய பேட்டிங் பார்ம் சரியில்லை என்றாலும் அவரின் கேப்டன்சி இப்போதும் டாப்பில்தான் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனிலேயே அவரின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது.

கேப்டன்சி

கேப்டன்சி

இதனால் அவர் ஆலோசகராக இந்திய அணிக்கு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி ஆலோசகர் ஆவதில் என்ன சிறப்பு என்றால், அவர் கோலியுடன் நட்பாக பழக கூடியவர். கோலி ஈகோ பார்க்காத நபர்களில் தோனிதான் முதலில் இருப்பார். அதேபோல் பார்ம் இல்லாத வீரர்களை எளிதாக பார்மிற்கு கொண்டு வரும் வித்தை தோனியிடம் உண்டு. ஜடேஜா, ஷரத்துல் போன்ற வீரர்கள் 3 வருடங்களுக்கு முன் பார்மில் இல்லாத போதே அவர்களை தோனி நம்பினார்.

கோலி

கோலி

இந்த நிலையில்தான் தோனியின் ஆலோசகர் நியமனம் அதிக கவனம் பெற்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், தோனி ஏற்கனவே தனது ஆலோசகர் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ஆம் தற்போது அமீரகத்தில் சிஎஸ்கே தங்கி இருக்கும் அதே ஹோட்டலில்தான் இந்திய அணி டி 20 தொடரில் தங்க போகிறது. டி 20 தொடருக்கு முன் வீரர்கள் இந்தியா செல்ல மாட்டார்கள். ஐபிஎல் முடித்துவிட்டு அப்படியே இந்த ஹோட்டலுக்கு வந்து தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே இப்போது இருக்கும் அதே ஹோட்டலை இந்திய அணி பயன்படுத்தும். இதற்காக ஏற்கனவே பிசிசிஐ ஸ்பெஷல் டீம் ஒன்று அமீரகம் வந்துவிட்டது. இந்த ஹோட்டலில்தான் டி 20 உலகக் கோப்பை குறித்த ஆலோசனைகளை பிசிசிஐ டீம் செய்து வருகிறது. பயிற்சியாளர் குழுவிலும் சிலர் ஏற்கனவே இங்கே வந்துவிட்ட நிலையில் தோனி ஏற்கனவே இவர்களுடன் ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Moeen Ali to retire from Test cricket | OneIndia Tamil
    சிஎஸ்கே ஹோட்டல்

    சிஎஸ்கே ஹோட்டல்

    இந்திய அணி குறித்த ஆலோசனைகளை தோனி செய்து வருவதாக கூறப்படுகிறது. தோனிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஆலோசகர் பொறுப்பு என்பது பயிற்சியாளருக்கு இணையானது. தலைமை பயிற்சியாளருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் இவருக்கும் அளிக்கப்படும் என்பதால் இப்போதே இவர் தனக்கான பணிகளை தொடங்கிவிட்டார். விரைவில் மற்ற பயிற்சியாளர்களுக்கு இங்கே வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இப்போதே சிஎஸ்கே அணி இருக்கும் ஹோட்டலுக்கு பிசிசிஐ குழு வந்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ இருப்பதாகவே தெரிகிறது. இதனால் தோனிக்கு பதவி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என்று பிசிசிஐ அமைப்பு கலக்கி உள்ளது.

    English summary
    India T20 squad will join in CSK hotel soon: Support staff are coming to the venue in UAE.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X