இந்தியா vs ஸ்காட்லாந்து மோதல்: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
துபாய்: இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12வது சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
இந்த வெற்றியால், மைனஸ் நெட் ரன் ரேட் என்ற இடத்திலிருந்தும் பிளஸ் என்ற இடத்திற்கு முன்னேறிவிட்டது இந்தியா.

இரு போட்டிகள்
இந்த நிலையில்தான் இன்று ஸ்காட்லாந்து அணியுடன் இந்தியா மோதுகிறது. இதன்பிறகு நமீபியா அணியுடன் ஒரு போட்டி பாக்கி இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டுமென்றால் இதை இந்திய அணி செய்தாக வேண்டும்.

ஸ்காட்லாந்து அணி
நியூசிலாந்து அணி எவ்வாறு பிற போட்டிகளில் ஆடுகிறது என்பதை பொறுத்தும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்க அம்சமாகும். அதேநேரம் ஸ்காட்லாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடுமையாக போட்டி கொடுத்தது அந்த அணி. 16 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது.

இந்தியா அபார ஆட்டம் தேவை
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடியதைப்போலவே, ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி அபாரமாக விளையாட வேண்டும். பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். ஏனென்றால் நியூசிலாந்து அடுத்ததாக நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் நியூசிலாந்து அணி தோற்றால் அப்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளில் நெட் ரன் ரேட் கணக்கில் எடுக்கப்படும். இதற்காகத்தான் இந்தியா கூடுதல் முயற்சி எடுத்து விளையாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இரண்டும் நடக்க வேண்டும்
ஸ்காட்லாந்துக்கு அல்லது நமீபியா அணிகளுக்கு எதிராக ஏதாவது ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் கனவு தகர்ந்து விடும். அதேபோல நமீபியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக நியூஸிலாந்து வெற்றி பெற்று பெற்றாலும் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு போக முடியாது. ஏனென்றால் நியூசிலாந்து அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் தோற்றது. ஆனால் இந்திய அணி ஏற்கனவே இரண்டு தோல்விகளை சந்தித்து விட்டது. எனவே, புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

பிரமாண்ட வெற்றி தேவை
ஒரு பக்கம் நியூசிலாந்து ஏதாவது ஒரு போட்டியில் தோற்க வேண்டும், இந்தியா தனது ரன் ரேட் விகிதத்தை அதிகமாக வைத்து இரு போட்டிகளையும் ஜெயிக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்தால் மட்டும் தான் இந்திய அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டியது வெறும் வெற்றியோடு நிறுத்திக் கொள்ளாது, பிரம்மாண்டமான வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதுதான்.