துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லக்கிமேன்.. விழுந்த ஜாக்பாட்.. இந்தியரை பார்த்து வாயை பிளந்த வெளிநாட்டுக்காரர்கள்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு அமீகரத்தில் லாட்டரி வாங்கிய இந்தியருக்கு சுமார் 20 கோடி பரிசு விழுந்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவருக்கு அபுதாபியில் நடந்த ரேஃபிள் போட்டியில் 10 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் தொடர்ந்து அபுதாபி லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்பிரீத் சிங், இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஐடி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.குர்பிரீத் சிங், அபுதாபியில் நடந்த ரேஃபிள் போட்டியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 067757 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் எண்ணை வாங்கியிருக்கிறார். இவர் 10 மில்லியன் திர்ஹாம் (19.90 கோடி) என்ற மிகப்பெரிய ஜாக்பாட்டை வென்றுள்ளார்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சிங் ரேஃபிள் டிராவின் அமைப்பாளர்களிடமிருந்து வெற்றி பெற்றதற்கான அழைப்பு குர்பிரீத் சிங்கிற்கு சென்றுள்ளது. நீங்களும் வெற்றியாளர்களில் ஒருவர் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் இது ஒரு குறும்பு அழைப்பு என்று கண்டுகொள்ளவில்லை.

பிஇ படித்துவிட்டு ஐபிஎஸ் ஆனது ஏன்?.. தமிழகத்தின் கிரண் ஸ்ருதியிடம் மோடி கேள்வி.. செம கலந்துரையாடல்!பிஇ படித்துவிட்டு ஐபிஎஸ் ஆனது ஏன்?.. தமிழகத்தின் கிரண் ஸ்ருதியிடம் மோடி கேள்வி.. செம கலந்துரையாடல்!

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

இதுபற்றி குர்பிரீத் சிங், கூறுகையில். "எனக்கு பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்ட அன்று நான் வேலையில் மும்முரமாக இருந்தேன். நான் பரிசு விழுந்ததை கேட்டு மிகவும் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். யாராவது பிற்பகலில் அழைத்து ‘நீங்கள் 10 மில்லியன் திர்ஹாம் (20 கோடி ரூபாய்) வென்றீர்கள்' என்று சொன்னால் எப்படி உங்களுக்கு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்தால் என் மகிழ்ச்சி புரியும்.

நேரலையில் பார்க்கவில்லை

நேரலையில் பார்க்கவில்லை

நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிக் டிக்கெட் ரேஃப்பில் பங்கேற்று வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் டிராவை நேரலையில் பின்பற்றுவது கிடையாது. தொற்றுநோயால் ரேஃபிளின் நேர மாற்றத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் வெற்றியாளர் குறித்து செப்டம்பர் டிரா கூறிய பின்னரே எனக்கு ஜாக்பாட் கிடைத்திருப்பது தெரிந்தது.

ஷார்ஜாவில் வீடு

ஷார்ஜாவில் வீடு

ஜாக்பாட் பணத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு வீட்டை வாங்க முடிவு செய்துள்ளேன். என் பெற்றோரை பஞ்சாபிலிருந்து அழைத்து வர முயற்சித் வருகிறேன். புதிதாக வாங்க உள்ள வீட்டில் என் குடும்பத்தினருடன் தங்க முடியும் . நான் எப்போதும் என்னிடம் பணம் இருந்தால் இங்கே ஒரு வீடு வாங்கிட வேண்டும் என்று நினைத்தேன். வயதான எனது பெற்றோரை இங்கு அழைத்து வருவேன். ஏனெனில். அவர்கள் பஞ்சாபில் தனியாக தங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வேலையிலிருந்து வீடு திரும்பும் போது, ​​அந்த அதிர்ஷ்டம் எப்போது என்னைப் பார்த்து சிரிக்கும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது. லக்கி டிராவில் எல்லோரும் தங்கள் அதிர்ஷ்டத்தை தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்,

முயற்சி செய்யுங்கள்

முயற்சி செய்யுங்கள்

சில நேரங்களில் நான் எனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து டிக்கெட் வாங்குவேன். சில நேரங்களில் சொந்தமாகவும் வாங்குவேன். ஆனால் இப்போது இந்த டிக்கெட்டை நான் மட்டுமே சொந்தமாக வாங்கினேன். என்னை போன்று தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும், நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கலாம். நீங்கள் கனவு காணும்போது, ​​பெரியதாக கனவு காணுங்கள்" இவ்வாறு குர்பிரீத் சிங் கூறினார். தொற்றுநோயின் செகண்ட் வேவ் துபாயில் இருப்பதால் இந்த மகிழ்ச்சியை சிங் பெரிய அளவில் கொண்டாட விரும்பவில்லை என்றார்.

English summary
A 35-year-old Indian man in the UAE has won a whopping jackpot of 10 million dirhams (19.90 crores) in a raffle in Abu Dhabi,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X