துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துபாயில் இந்தியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர் ?| First Indian who tested positive for Corona virus now

    துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா வைரஸால் இந்தியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இத்துடன் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 42,638 ஆக உயர்ந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

    Indian national tests positive for novel coronavirus in UAE

    அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடிய நிலையில் அவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளதாக கண்டறியப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், " ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 8பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது. கடைசியாக பாதிக்கப்பட்ட நபர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1000ஐ தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. முடங்கிய சீனா.. விழிபிதுங்கும் சீன அரசு.. பரபரப்பு! 1000ஐ தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. முடங்கிய சீனா.. விழிபிதுங்கும் சீன அரசு.. பரபரப்பு!

    .முன்னதாக ஞாயற்றுக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பில், சீனாவைச் சேர்ந்த ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தது. அவர்களுக்கு மிக உயர்ந்த தரமான சிகிச்சை அளிக்கப்படு வருகிறது என்று தெரிவித்தது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்த ஒரு நபருக்கும் தரமான சுகாதார வசதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    English summary
    UAE Ministry of Health and Prevention (MoHAP) said Monday that Indian national tests positive for novel coronavirus in UAE
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X