துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.7.34 கோடியை அப்படியே தூக்கி கொடுத்த துபாய்.. இந்தியருக்கு கிடைத்த பம்பர் பரிசு

Google Oneindia Tamil News

துபாய்: துபாய் லாட்டரியில் இந்தியருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது. ஜாக்பாட் பரிசு பெற்றவர் பெயர் சவுரவ் தேவ். வயது 45.

துபாய் Duty free லாட்டரியை முதல் முறையகா சவுரவ் தேவ் வாங்கியிருந்தார். நேற்று லாட்டரி குலுக்கல் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு பெரிய பம்பர் பரிசை சவுரவ் தேவ் வென்றார்.

துபாயில், கடந்த 6 வருடங்களாக சவுரவ் தேவ் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விழுந்த லக்கி பிரைஸ்

விழுந்த லக்கி பிரைஸ்

கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் போதுதான், இந்த லாட்டரி டிக்கெட்டை அவர் வாங்கினாராம். சும்மா வாங்கி பார்ப்போமே என்று நினைத்து வாங்கிய அந்த லாட்டரியால் இன்று இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக சவுரவ் தேவ் மாறியுள்ளார்.

குடும்பத்திற்கே நல்லது

குடும்பத்திற்கே நல்லது

"எனக்கு முதல்பரிசு கிடைத்துள்ளதை இப்போதுவரை என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பரிசு எனக்கு புதிய வருங்காலத்தையும், என் குடும்பத்துக்கு மிகப்பெரிய வாழ்வையும் மிக நீண்டகாலத்துக்கு அளிக்கும்" என்று உணர்ச்சிப் பெருக்கில் தெரிவித்தார், சவுரவ் தேவ்.

இன்னும் பல பரிசுகள்

சவுரவ் தேவ் மட்டுமல்ல, இந்தியரான அஜித் பாபு என்பவருக்கு லாட்டரியில் 2வது பரிசாக பிஎம்டிபிள்யு சொகுசு கார் கிடைத்துள்ளது. 3வது பரிசு ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் ஆகும். இது, இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனாவுக்கு கிடைத்துள்ளது.

லாட்டரி விலை

லாட்டரி விலை

Duty free lottery டிக்கெட் ஒன்றின் விலை 28 அமெரிக்க டாலராகும். எனவே இதை பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள். இதன் மூலம், லாட்டரி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

English summary
An Indian national hit a jackpot today to become the latest winner of the $1 million Dubai Duty Free raffle, a media report said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X