துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்ரேலிலிருந்து.. அமீரகத்திற்கு பறந்த "பீஸ்" விமானம்.. உலக அரசியலில் முக்கிய நிகழ்வு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

அபுதாபி: இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து அமீரகத்திற்கு முதல்முறையாக அதிகாரபூர்வ விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு முழுக்க பல விசித்தரங்களையும், திருப்பங்களையும், சோகங்களையும் கொண்ட வருடமாக திகழ்கிறது. அதிலும் உலக அரசியலில் இந்த வருடம் முழுக்க அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்திய - சீன மோதல், அமெரிக்க - சீன மோதல், ஈரான் - அமெரிக்க மோதல், பாக் - சவுதி என்று வரிசையாக உலக நாடுகள் இடையே மோதல்கள் எழுந்துள்ளது.

இப்படி உலகம் முழுக்க பலம் வாய்ந்த நாடுகள் மோதலில் இறங்கி உள்ள நிலையில் பல வருடமாக மோதி வந்த இரண்டு நாடுகள் தற்போது அமைதி உடன்படிக்கையை செய்துள்ளது. ஆம் இஸ்ரேலும், இஸ்லாமிய நாடுகளில் மிக முக்கியமான நாடாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரகமும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

புது சர்ச்சை.. வெள்ளை இன சிறுவனின் இனவெறி.. 2 உசுரு போச்சு.. அவனுக்கு வக்காலத்து வாங்கும் டிரம்ப்புது சர்ச்சை.. வெள்ளை இன சிறுவனின் இனவெறி.. 2 உசுரு போச்சு.. அவனுக்கு வக்காலத்து வாங்கும் டிரம்ப்

அமெரிக்காவின் தலையீடு

அமெரிக்காவின் தலையீடு

இந்த ஒப்பந்தத்தை இரண்டு நாட்டு ஒப்பந்தம் என்று சொல்வதை விட..இஸ்ரேல் - அமெரிக்கா - அமீரகம் இடையே நடந்த மூன்று நாட்டு ஒப்பந்தம் என்று கூறலாம். இஸ்ரேல் - அமீரகத்திற்கு பாலம் போல அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது.அமெரிக்க அதிபர் டிரம்பின் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல்தான் அதிக பலன் அடைகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று புகார் உள்ளது.

எப்படிப்பட்ட ஒப்பந்தம்

எப்படிப்பட்ட ஒப்பந்தம்

அது என்ன ஒப்பந்தம் என்று பார்த்தால்.. பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த போவதாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாறாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். அதாவது இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உறவுகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகள் உடன் எளிதாக இஸ்ரேல் எதிர்காலத்தில் நட்பாக முடியும்.

இணைப்பு ஏற்பட்டது

இணைப்பு ஏற்பட்டது

ஆகஸ்ட் 13ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு மறுநாளே இஸ்ரேல் அமீரகம் இடையே அதிகாரபூர்வ தொலைபேசி ஹாட்லைன் உருவாக்கப்பட்டது. அதன்பின் விரைவில் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ விமான போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு நாடுகளுக்கும் இடையில் விமான போக்குவரத்து முதல்முறையாக இயக்கப்பட்டது. இஸ்ரேலில் இருந்து அபுதாபிக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டது.

யார் எல்லாம் சென்றனர்

யார் எல்லாம் சென்றனர்

அமெரிக்க அதிபர் டிரம்பின் உறவினர் (தனிப்பட்ட ஆலோசகர்), வெள்ளை மாளிகை அதிகாரிகள், டிரம்பின் ஆலோசகர்கள், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ஆலோசகர்கள் ஆகியோர் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து அபுதாபிக்கு இந்த விமானம் மூலம் சென்றனர். இஸ்ரேலின் El Al விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் அமைதி (peace) என்று ஆங்கிலம், ஹீப்ரூ, அரபி ஆகிய மொழியில் எழுதப்பட்டு இருந்தது. இந்த விமானத்திற்கு கிர்யாத் காட் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

அமைதி முக்கியம்

அமைதி முக்கியம்

பாலஸ்தீனத்தின் கீழ் ஒரு காலத்தில் இருந்து தற்போது இஸ்ரேலில் இருக்கும் பகுதிதான் கிர்யாத் காட். இதன் மூலம் அபுதாபிக்கு முதல் முறையாக இஸ்ரேல் விமான போக்குவரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானம் சவுதி அரேபியா மேலே பறந்து சென்றது இன்னொரு சிறப்பம்சம். இதற்காக சவுதியிடம் இஸ்ரேல் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தது. இஸ்ரேல் - அமீரக ஒப்பந்தத்தை சவுதி எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - அமீரக ஒப்பந்தத்தை சவுதி எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரியாத் அதில் அமைதி காத்து வருகிறது,

பாலஸ்தீனம் எப்படி

பாலஸ்தீனம் எப்படி

இந்த ஒப்பந்தத்தை தொடக்கத்தில் இருந்து பாலஸ்தீனம் எதிர்த்து வருகிறது. அமீரகம் எங்கள் முதுகில் குத்திவிட்டது என்று பாலஸ்தீனம் கூறி உள்ளது. இது மிக மோசமான நாள், எங்கள் இதயம் கனக்கிறது என்று அமீரகம் குறித்து பாலஸ்தீனம் கூறியுள்ளது. அதோடு இந்த ஒப்பந்தத்தை ஈரான் எதிர்த்து உள்ளது. இன்னொரு பக்கம் துருக்கியும் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளது.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இரண்டு நாட்கள் அமீரகத்தில் இருப்பார்கள். பொருளாதாரம், வணிகம், சுற்றுலா, பாதுகாப்பு ரீதியான ஒப்பந்தங்களை இதில் இஸ்ரேல் - அமீரகம் செய்ய உள்ளது. இதை அமெரிக்கா மேற்பார்வையிடுகிறது. அதன்பின் இந்த ஒப்பந்தங்கள் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் கையெழுத்து இடப்படும். இதற்காக அமெரிக்காவில் விழா நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகள் கூட்டணி

இஸ்லாமிய நாடுகள் கூட்டணி

இந்த ஒப்பந்தம் காரணமாக மேலும் பல இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . பல்வேறு அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. பஹ்ரைன், ஓமான், சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யலாம். இஸ்ரேல் உடன் ஒப்பந்தமிட மொராக்கோவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் செய்திகள் ஒரு பக்கம் பாலஸ்தீனத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏமாற்று வேலையாக இருக்கும்

ஏமாற்று வேலையாக இருக்கும்

இதனால் இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து பாலஸ்தீனம் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் இரண்டு பெரிய ஓட்டைகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒன்று, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிக்காது என்று எங்கும் உறுதி அளிக்கவில்லை. தற்காலிகமாக ஆக்கிரமிக்க மாட்டோம் என்று கூறியுள்ளோம். ஆனால் இது தற்காலிகம் மட்டுமே. எதிர்காலத்தில் அமெரிக்க அனுமதியுடன் இஸ்ரேல் பலாஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கும். இதற்கு இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கலாம் என்றால்... இந்த ஓப்பந்தத்தின் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகிறது.

இஸ்ரேல் அச்சம்

இஸ்ரேல் அச்சம்

இன்னொரு பக்கம் இந்த ஒப்பந்தத்திற்கு பின்பும் கூட அமெரிக்காவிடம் இருந்து அமீரகம் நவீன விமானங்களை, ஆயுதங்களை வாங்க கூடாது என்று இஸ்ரேல் கூறி வருகிறது. அதாவது எப் 35 போன்ற விமானங்களை அமீரகம் வாங்க கூடாது என்று இஸ்ரேல் கூறுகிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே நவீன ஆயுதங்களை, விமானங்களை வைத்து இருக்கும் என்று அமெரிக்கா 1960ல் ஒப்பந்தம் செய்தது. அதில் இருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலை விட குறைந்த சக்தி கொண்ட ஆயுதங்களை மட்டுமே அமெரிக்கா அனுப்பி வந்தது. இஸ்ரேலை விட இஸ்லாமிய நாடுகள் ராணுவ ரீதியாக வலிமை அடைய கூடாது என்று இந்த டீலிங் செய்யப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தற்போது எப்35 விமானங்களை அமீரகம் வாங்க திட்டமிடுக்கிறது . எப்35 அமீரகத்திற்கு வந்தால் , அது இஸ்ரேலின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும். இதனால் இஸ்ரேல் தற்போது அச்சத்தில் இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் அமீரகம் பாதுகாப்பு ரீதியான சலுகைகளை பெற முயற்சிக்கிறது. ஆனால் அதை இஸ்ரேல் விரும்பவில்லை. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ''பிரண்ட் ரெக்யூஸ்ட்டின்'' தொடக்கமே ''டிஸ்லைக்கில்'' ஆரம்பித்து உள்ளது.. இந்த ஒப்பந்தம் நீண்ட வருடம் நிலைக்குமா என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது!

English summary
Israel - UAE Deal: First commercial flight landed in Abu Dhabi from Del Aviv with US officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X