அருவருப்பாக பேசியவர்களுக்கு சம்மட்டி அடி.. இது முகமது ஷமி ஸ்பெஷல்.. செம பவுலிங்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு நுலிழையில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானை அடித்து துவைத்த இந்திய அணி, ஸ்காட்லாந்தை இன்று பாந்தாடி விட்டது.
உயிரைப்பறித்த தீபாவளி மது விருந்து ... மதுபானம் அருந்திய 3 நண்பர்கள்... அடுத்தடுத்து பலி
ஆனாலும் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்றால்தான் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு கதவு திறக்கும். இந்தியா செமி பைனலுக்கு அடுத்த அணியை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு வந்த காரணம் பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் ஏற்பட்ட மோசமான தோல்விதான்.

தொடக்கத்தில் மோசமான தோல்வி
தொடக்கத்தில் இந்திய அணியின் மோசமான தோல்வியை எந்த ஒரு இந்தியராலும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஆனால் ஒரு சிலர் கிரிக்கெட் விளையாட்டு. இதில் வெற்றி தோல்வி சகஜம் என்பதை மறந்து வீரர்களின் குடும்பத்தையும், அவர்களின் தனிப்பட்ட மதத்தையும் வைத்து விமர்சித்து வந்தனர்.

மதரீதியாக பேசினார்கள்
அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் சொதப்பி அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் முகமது ஷமியின் குடும்பத்தை பற்றியும், மதரீதியாகவும் சிலர் சமூக வலைத்தளத்தில் பேசினார்கள். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அவரை தனிப்பட்ட முறையில் தேவையில்லாமல் திட்டி தீர்த்தனர். அதே வேளையில் சிலர் முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றனர்.

விராட் கோலி ஆதரவு
பாகிஸ்தானைச் சேர்ந்த பல வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றனர். இதேபோல் ஷமிக்கு ஆதரவு கொடுத்த கேப்டன் விராட் கோலி, ' 'எந்த நபருடனும் நேரில் பேச தைரியம் இல்லாத முதுகெலும்பு அற்றவர்கள்தான் இப்படி கூறுவார்கள்' நாங்கள் எப்போதும் ஒரு அணியாக ஒன்றுபட்டு நிற்கிறோம்'' என்று கூறினார்.

பதிலடி கொடுத்த முகமது ஷமி
தன்னையும், தனது குடும்பத்தையும் அருவருப்பாக பேசியவர்களுக்கு இன்று ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியிலும், கடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் செமையாக பவுலிங் போட்டு தரமான பதிலடி கொடுத்துள்ளார் முகமது ஷமி. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது ஷமி. இதேபோல் ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் தனது வின்டேஜ் பவுலிங் ஸ்பெல் போட்டு மிரட்டினார் ஷமி.

சம்மட்டி அடி
3 ஓவர்கள் பவுலிங் போட்ட முகமது ஷமி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்காட்லாந்து 85 ரன்களில் ஆல்அவுட்டாக மிக முக்கிய காரணமாக விளங்கினார் ஷமி. பழைய பார்முக்கு வந்துள்ள முகமது ஷமி தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு முகமது ஷமி சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.