• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வார்னர் சிக்ஸ் சர்ச்சை.. கம்பீர் ட்வீட்டில் என்ட்ரி கொடுத்த அஸ்வின்.. நறுக்குன்னு கேட்ட கேள்வி!

Google Oneindia Tamil News

துபாய்: இதுதான் கேம் ஸ்ப்ரிட்டா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அடித்த ஷாட் பற்றி கேள்வி எழுப்பிய கவுதம் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த ஒரு சிக்சர் இந்த வாத விவாதங்களுக்கு காரணமாக மாறியுள்ளது.

வார்னர் பேட்டிங் கிரீசில் நின்றபோது, 8வது ஓவரை வீச ஹபீஸ் வந்தார். ஆப் ஸ்பின் பவுலரான அவர், அடிக்கடி பந்து போடக் கூடியவர் இல்லை. முன்னணி பவுலர்களை கடைசி கட்டத்தில் பயன்படுத்துவதற்காக ஹபீசை பந்து வீச கொண்டு வந்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர்.

இதுதான் 'கேம் ஸ்ப்ரிட்டா?' வெட்கக் கேடு.. டேவிட் வார்னரை விட்டு விளாசிய கவுதம் கம்பீர்! இதுதான் 'கேம் ஸ்ப்ரிட்டா?' வெட்கக் கேடு.. டேவிட் வார்னரை விட்டு விளாசிய கவுதம் கம்பீர்!

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனால் தடுமாற்றத்தோடு ஹபீஸ் பந்து வீசினார். ஓவரின் முதல் பந்தை அவர் வீச முயன்றபோது கையை விட்டு வழுக்கிவிட்டுச் சென்றது. அந்த பந்து 2 பிட்ச் ஆகி லெக் சைடுக்கு போனது. இது டெட் பால் என்றுதான் தமிழ் கமெண்டரி செய்தவர்கள் கூட கூறினர். ஆனால் வார்னர் திடீரென கிரீசை விட்டு இறங்கி வந்தார். அந்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பிரமாண்ட சிக்சராக அடித்தார். அதை நோ பால் என்று அறிவித்தார் நடுவர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இருப்பினும், இப்படி கையிலிருந்து நழுவி சென்ற பந்தை தேடி பிடித்து அடித்த வார்னரின் செயல் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில் வார்னர் அடித்த இந்த ஷாட்டின் போட்டோவை பகிர்ந்து, கேம்ப் ஸ்பிரிட் என்பது இதுவா. மோசமான ஆட்டம். வெட்கக் கேடு. என்ன சொல்கிறீர்கள் அஸ்வின். இவ்வாறு கம்பீர் கேள்வி எழுப்பியிருந்தார்.

வார்னருக்கு கொடுத்த பதிலடி

வார்னருக்கு கொடுத்த பதிலடி

கவுதம் கம்பீர் பாகிஸ்தான் அணியை விட்டு விளாசுவதை வாடிக்கையாக கொண்டவர். ஆனால் வார்னரை திடீரென அவர் விமர்சனம் செய்ய காரணம் ஒன்று உள்ளது. 2019ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், அஸ்வின் பந்து வீசும்போது எதிர்முனையிலிருந்து முன்கூட்டியே கிரீசை விட்டு வெளியே சென்ற ஜோஸ் பட்லரை ஸ்டம்பில் ரன் அவுட் முறையில் அடித்து அதாவது மேன்கட் முறையில் அவுட் செய்தார். இதைப் பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேர் வார்னே விமர்சனம் செய்திருந்தார். இதெல்லாம் விளையாட்டின் ஸ்ப்ரிட்டுக்கு எதிரானது. எச்சரிக்கை செய்து விட்டு விட்டிருக்க வேண்டும் என்று அஸ்வினுக்கு நடத்தியிருந்தார் வார்னே. எனவேதான் அஸ்வினிடம், வார்னர் பற்றி கேள்வி எழுப்பி வார்னேவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் கம்பீர்.

முட்டு கொடுக்கும் ஆஸி. தரப்பு

முட்டு கொடுக்கும் ஆஸி. தரப்பு

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தப்பையும் செய்து விட்டு, அதற்கு கூச்சமின்றி முட்டு கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே. எனவேதான், கவுதம் கம்பீர் ட்வீட்டுக்கு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் எதிரிவினையாற்றியுள்ளார். தப்பான கருத்து கவுதம் என்று அவர் அட்வைஸ் செய்துள்ளார். இந்த காட்சியில்தான் என்ட்ரி ஆகியுள்ளார் அஸ்வின். பதிலடியாக ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் பதிலடி

அஸ்வின் பதிலடி

கவுதம் கம்பீர் சொல்ல வருவது ஒரு விஷயம்தான். இது சரி என்றால், அதுவும் சரி, அது தவறு என்றால், இதுவும் தவறு. இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதாவது மேன்கட் செய்ய கிரிக்கெட்டில் விதிமுறை அனுமதிக்கிறது. ஆனாலும் பவுலர்கள் செய்வதில்லை. அப்படி செய்தால் விமர்சனங்கள் செய்கிறார்கள். அஸ்வின் அப்படியான விமர்சனத்திற்குதான் உள்ளானார். வார்னர் அடித்த ஷாட்டும் தேவையற்றது. ஆனால் ரன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வார்னர் அதை செய்தார். கிரிக்கெட் விதிமுறை அதற்கு அனுமதிக்கிறது. இதைத்தான் அஸ்வின் சுட்டிக் காட்டியுள்ளார்.

தப்பேயில்ல பாஸ்

தப்பேயில்ல பாஸ்

இதனிடையே ஒரு நெட்டிசன், அஸ்வினுக்கு பதில் போட்டுள்ளார். அவர் கூறுகையில், வார்னர் செய்தது தப்பில்லை. தனக்கு முன்னாள் வந்த பந்தை அடித்தார் என்று கூறினார். அஸ்வினும் அதை தவறு என்று கூறவில்லை. ஆம். அது ஒரு சிறப்பான ஷாட். டேவிட் வார்னர் சிறப்பாக அடித்தார் என்று கை தட்டும் எமோஜியை போட்டு பதிலடி கொடுத்துள்ளார். அஸ்வின் தப்பு என்றால் வார்னரும் தப்பு, வார்னர் சரி என்றால் அஸ்வினும் சரி. இந்த உண்மையை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறது உலகம்? இதுதான் இந்த கான்வோவின் சாராம்சம்.

English summary
T20 world cup 2021: India spinner Ravichandran Ashwin took to Twitter to offer his take on David Warner's six off Mohammad Hafeez during Australia five-wicket win over Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X