துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிற்கே தமிழ் கிளாஸ் எடுத்த "டிகே"..பழைய அவமானத்திற்கு வருண் தந்த பளீர் பதிலடி.. மாஸ் சம்பவம்

Google Oneindia Tamil News

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இன்று கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட் எடுத்துள்ளார்.

பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கொல்கத்தா என்று வந்துவிட்டாலே பெங்களூர் அணி பேட்டிங்கில் சொதப்புவதுதான் வரலாறு. இன்றும் அதேபோல்தான் மூன்று டிஜிட் ரன்களை எடுக்கவே பெங்களூர் அணி கடுமையாக திணறியது.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

கோலி 5, டிவில்லியர்ஸ் 0, மேக்ஸ்வெல் 10, படிக்கல் 22 என்று எந்த வீரரும் பெரிதாக அடிக்காமல் பெங்களூர் அணி வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது. இன்று ரசல் மட்டும் 3 விக்கெட் எடுத்தார். அதேபோல் தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

வருண்

வருண்

வருண் இன்றைய போட்டியில் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்தார். பிட்னஸ் பிரச்சனை காரணமாக தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த வருண் டி 20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்த சூட்டோடு சூடாக இன்று ஐபிஎல் போட்டியிலும் கலக்கினார். மிஸ்ட்ரி ஸ்பின் பவுலரான வருண் இன்று போட்ட ஒவ்வொரு பந்தும் மிஸ்ட்ரி ஸ்பின் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் இவர் போட்ட 12வது ஓவர்தான் மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது.

விக்கெட்

விக்கெட்

அந்த ஒரு ஓவரில் மட்டும் வருண் இரண்டு விக்கெட்டை எடுத்தார். ஸ்பின் பவுலர்களை வெளுத்து எடுக்கும் மெக்ஸ்வெல்லுக்கு பந்தை 89.5 கிமீ வேகத்தில் லேசாக தூக்கி வீசுவது போல வீசிவிட்டு, பந்தை ஸ்டம்பை நோக்கி திருப்பி அசத்தினார். பந்தை ரீட் செய்ய முடியாமல் குழம்பிய மேக்ஸ்வெல் 10 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பின் அடுத்த பந்திலேயே ஹசரங்கவை லென்த் பால் போட்டு எல்பிடபிள்யு விக்கெட் எடுத்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் எடுத்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இவர் மீது இருந்த நம்பிக்கை காரணமாகவே இன்று அவருக்கு முதல் ஓவர் கொடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு அவர் மீது அணி நம்பிக்கை வைத்துள்ளது. பின்னர் 14வது ஓவரில் மீண்டும் பந்தை இதேபோல் புல் லென்தில் வைடாக பந்தை வருண் சக்ரவர்த்தி தூக்கி வீசினார். இதை கணிக்க முடியாமல் தூக்கி அடித்த சச்சின் பேபி ராணாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வரிசையாக இதன் மூலம் மூன்று விக்கெட் எடுத்து வருண் ஆட்டத்தை மாற்றினார்.

அவமானம்

அவமானம்

பழைய அவமானங்கள் பலவற்றுக்கு வருண் சக்ரவர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடர் இடையில் நிற்கவே வருண் ஸ்கேன் எடுக்க சென்றுவிட்டு கொரோனாவோடு திரும்பியது காரணம் என்று அவர் மீது பழி போடப்பட்டது. இதனால் வருணை பலரும் மோசமாக கிண்டல் செய்து இருந்தனர். அதே போல வருண் சரியாக பிட்டாக இல்லை. பவுலிங் போட்டாலும் பிட்னஸ் இல்லை என்று அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று வருண் சக்ரவர்த்தி பவுலிங் செய்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி பவுலிங் போட வந்த போதெல்லாம் தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தமிழில்தான் பேசினார். பொதுவாகவே வருண் பவுலிங் செய்ய வந்தால் தினேஷ் தமிழில் பேசுவது வழக்கம். இவர்கள் தமிழில்தான் திட்டம் போட்டு விக்கெட் எடுப்பார்கள். இன்றும் அதேபோல் தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்திக்கு தமிழில் வழிகாட்டினார். இப்படி போடு.. பந்தை உள்ள போடு.. அதே லைனில் பாலை மெயின்டெயின் பண்ணு.

தமிழ்

தமிழ்

அடிக்க மாட்டான் பார்த்துக்கலாம்.. அப்படியே போடு என்று தொடர்ந்து தினேஷ் கார்த்திக் வருணை வழி காட்டினார். எப்போதும் இருப்பதை விட இந்த முறை தினேஷ் அதிக நேரம் தமிழில் பேசியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் வட இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்களும் தினேஷ் கார்த்திக் வருண் சக்ரவர்த்தி ஜோடியை நாங்கள் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தால் தமிழ் கற்றுக்கொண்டு விடுவோம்.

சிறப்பான தமிழ்

சிறப்பான தமிழ்

இவர்கள் பேசுவதை கேட்கும் போது எங்களுக்கு தமிழ் தெரியாதது வருத்தம் அளிக்கிறது என்று பல வடஇந்திய நெட்டின்சன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். அவர்கள் முழுக்க முழுக்க தமிழில் பிளான் போட்டு அவர்கள் விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். வருணை தினேஷ் கார்த்திக் சிறப்பாக வழி நடத்துகிறார்.

English summary
RCB vs KKR: How spiner bowler Varun Chakravarthy mystery spin bowling changed the game?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X