• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னோட பெட்ல படுத்துக்கப்பா, நான் தரையில படுத்துக்கிறேன்.. தோனி சொன்ன வார்த்தை.. உருகிப்போன பாண்ட்யா

Google Oneindia Tamil News

துபாய்: பால்கனி பக்கத்தில் ரூம் ஒதுக்கவில்லை என்று கூறி ஒரு ஐபிஎல் சீசன் முழுக்க விளையாடாத வீரர் பற்றி எல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் தன்னுடைய படுக்கையை ஒரு இளம் வீரருக்கு வழங்கிவிட்டு தரையில் படுக்க தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகரான தோனி கூறிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்காகத்தான் தனது படுக்கையை தியாகம் செய்வதற்கு தோனி தயாராக இருந்துள்ளார். இந்த தகவலை ஹர்திக் பாண்டியா தனது வாயாலேயே தெரிவித்திருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?

ஆலோசகர் தோனி

ஆலோசகர் தோனி

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வாகியுள்ளார். அந்த அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ஹர்திக் பாண்டியா இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இதோ ஹர்திக் பாண்டியா வார்த்தையிலிருந்து.. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடைசி நேரத்தில் இந்திய அணியுடன் இணைந்து கொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு தங்குவதற்கு ஹோட்டலில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை.

  Scotlands T20 World Cup jersey designed by 12-year-old Rebecca | OneIndia Tamil
  பெட்டில் படுங்க

  பெட்டில் படுங்க

  இதுகுறித்து அறிந்ததும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டது தோனிதான். நான் படுக்கையில் படுப்பது கிடையாது எனவே நீங்கள் வந்து எனது படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். நான் தரையில் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் அணிக்காக விளையாட வந்தால் மட்டும் போதும். வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், என்று அவர் அன்போடு அழைத்தார்.

  தோனி முதல் ஆள்

  தோனி முதல் ஆள்

  பிரச்சனை எப்போது உருவாகிறதோ அதற்கு தீர்வு வழங்குவதற்கு தோனி முதல் ஆளாக அங்கே இருப்பார். அணியிலேயே மூத்த வீரர் தோனி. அப்படி இருந்தும் ஒரு இளம் வீரரான எனக்கு படுப்பதற்கு படுக்கையை தருவதாகவும் அவர் கீழே படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். ஆரம்ப காலம் முதலே எனது செயல்பாடுகள் எப்படி எனது திறமையை எப்படி என்பது பற்றி முழு அளவில் தெரிந்து வைத்திருந்தவர் தோனி. ஒவ்வொரு வீரரை பற்றியும் அவருக்கு மிக நன்கு தெரியும் .

  தோனி மனநிலை

  தோனி மனநிலை

  ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவதில் தோனிக்கு நிகர் தோனி மட்டும் தான். இவ்வாறு ஹர்திக் பாண்டியா நெகழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார். அது சரி.. கோப்பையை வாங்கி விட்டு இளம் வீரர்கள் கையில் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்தானே தோனி. ஒரு முனிவரை போன்ற கடமையை மட்டுமே செய்ய வேண்டும், பலனுக்காக ஓடக் கூடாது என்ற மனநிலை வாய்க்கப்பட்டவருக்கு இந்த தியாகங்கள் என்ன பெரிய விஷயமா என்ன..

  English summary
  Mentor MS Dhoni: Hardik Pandya recalls when MS Dhoni slept on floor for him while in India on the New Zealand tour.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X