துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட..பாகிஸ்தான் உட்பட பல அணிகளில் சிஎஸ்கே வீரர்களுக்குதான் முக்கிய பொறுப்பு! வீழ்த்துமா தோனி வியூகம்

Google Oneindia Tamil News

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே உலகம் முழுக்க ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது சிஎஸ்கே டீம்தான். இதற்கு காரணம், அந்த அணியின் கன்சிஸ்டன்சி.

2020 தவிர்த்து பிற அனைத்து வருடங்களிலும் பிளேஆப் சென்ற ஒரே அணி சிஎஸ்கேதான். 10 முறை பைனலுக்குள் சென்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.

இதனால்தான் தோனி தலைமையிலான சென்னை அணியுடன் ஒரு வீரராகவோ அல்லது வேறு பணிக்காகவோ தொடர்பிலிருந்த அனைவருமே, உலக ஃபேமஸ் ஆகிவிட்டனர். கோப்பையை வெல்லும் சீக்ரெட் இந்த அணிக்குதான் தெரியும் என்று உலக கிரிக்கெட் நிர்வாகங்கள் பலவும் நினைக்கின்றன.

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பயண தடையை நீக்கிய சிங்கப்பூர்.. இனி யாருக்கெல்லாம் அனுமதி தெரியுமா?இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பயண தடையை நீக்கிய சிங்கப்பூர்.. இனி யாருக்கெல்லாம் அனுமதி தெரியுமா?

தோனி

தோனி

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்திய அணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஆலோசகர் தோனி. அவர் சென்னை அணியின் கேப்டன். சரி அதை விடுங்க. அவர் இந்திய அணிக்காக ஆடிய லெஜன்ட். அந்த வகையில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் நியூசிலாந்து அணியின் ஆலோசகர் ஸ்டீபன் பிளம்மிங். அவர் சிஎஸ்கே அணி கோச்சாக இருப்பவர்.

நமீபியாவிற்கு அல்பே மோர்க்கல்

நமீபியாவிற்கு அல்பே மோர்க்கல்

பிளம்மிங்கையும் விடுங்க.. அவர் நியூசிலாந்தின் முன்னாள் சக்சஸ்ஃபுல் கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் இருந்தவர். அந்த ஊரில் தோனி மாதிரி அவர். அதனால் ஆலோசகர் பதவி என்று கூட சொல்லிவிட்டு விடலாம். நமீபியா அணியின் ஆலோசகர் யார் தெரியுமா.. அட சிஎஸ்கே முன்னாள் வீரர் அல்பே மோர்க்கல்தான் அவர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மோர்க்கல் இப்போது ஓய்வு பெற்று விட்டார். ஆனால் வேகப்பந்து ஆல் ரவுண்டரான இவரை சிஎஸ்கே முன்பு மொயீன் அலி போல இடதுகை அதிரடி பேட்ஸ்மேனாக பயன்படுத்தியது.

Recommended Video

    Ind Vs Pak இந்தமுறை இந்தியாவை வீழ்த்துவோம் - Babr Azam | Oneindia Tamil
    மேத்யூ ஹைடன்

    மேத்யூ ஹைடன்

    இவர்கள் எல்லோரும் ஆலோசகர் என்றால், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலசோகராக இருப்பவர் மேத்யூ ஹைடன். இவர் சிஎஸ்கே அணிக்காக ஆடியவர். ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர். சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இத்தனை நாடுகளிலும் ஆலோசகர் அல்லது கோச் என ஏதோ ஒரு பணியில் இருப்பவர்கள் சென்னை அணியுடன் தொடர்புடையவர்களாகும்.

     தோனியே நம்ம பக்கம்தான்

    தோனியே நம்ம பக்கம்தான்

    இதுதான் சிஎஸ்கே அணியின் சர்வதேச கவுரவம். சென்னை அணியிடம் ஏதோ ஒரு ஃபார்முலா இருக்கிறது, அது நமக்கு பயன்படுமா என்று பெரும்பாலான அணிகள் முயற்சி செய்து பார்க்கின்றன. ஆனால், சிஎஸ்கே அணியிலிருந்து யாரை வேண்டுமானாலும் உதவிக்கு கூட்டிப் போகட்டும். அந்த அணியின் கேப்டன் தோனியே நம்மிடம் இருக்க பயமேன்.

    English summary
    T20 world cup 2021: Many CSK players getting job chance in many international team which are playing t20 world cup 2021. The CSK team is the first thing that comes to mind when it comes to IPL cricket. This is because of the consistency of the team. CSK is the only team to have reached the playoffs in all but 2020. Chennai Super Kings are the only team to reach the final 10 times.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X