துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடியோடு வந்த வீரர்.. ஆரம்பத்திலேயே "மைண்ட் கேம்" ஆடிய பாக்... இந்தியாவை குழப்பிய பாபர்! -பின்னணி

Google Oneindia Tamil News

துபாய்: இந்திய டி 20 அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிக சிறப்பான திட்டத்தோடு பவுலிங் செய்துள்ளது. முக்கியமாக அந்த அணியின் பீல்டிங் மற்றும் பவுலிங் ரொட்டேஷன் இன்று சிறப்பாக அமைந்து இருந்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து ராகுல், ரோஹித், சூர்ய குமார் யாதவ் விக்கெட்டுகளை இழந்தது.

6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி! 6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி!

ஆனால் இன்னொரு பக்கம் கோலி நிதானமாக ஆடினார். ரன் ரேட் மீது கவனம் செலுத்தாமல் நிதானமான பேட்டிங் செய்தார்.

 அழுத்தம்

அழுத்தம்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான்தான் அழுத்தம் கொடுத்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் அணி வீரர்கள் வார்ம் அப் செய்ய தங்கள் நாட்டு கொடியோடு மைதானத்திற்கு வந்தனர். பொதுவாக எந்த கிரிக்கெட் அணியும் இப்படி செய்ததே கிடையாது. எந்த அணியும் மைதானத்தில் வாரம் அப் செய்ய வரும் போது கொடியை கொண்டு வர மாட்டார்கள்.

வார்ம் அப்

வார்ம் அப்

மைதானத்தின் ஒரு பக்கம் இந்திய வீரர்கள் வார்ம் அப் செய்து கொண்டு இருந்தனர். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணி தங்கள் கொடியை நட்டு வார்ம் அப் செய்து கொண்டு இருந்தனர். இது எங்களுடைய இடம் என்று சொல்வது போல பாகிஸ்தான் அணி செயல்பட்டது. பாகிஸ்தான் அணியின் இந்த செயலை பல கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் மைண்ட் கேம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

 ரக் பி

ரக் பி

பொதுவாக அமெரிக்காவில் ரக் பி ஆட்டங்களில் இதுபோல சில அணிகள் மைதானத்தில் தங்கள் கொடியை நடுவது வழக்கம். இது ஒரு வகையிலான மைண்ட் கேம். அதாவது இது எங்கள் இடம்.. எங்கள் கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருக்கும் என்று சொல்வது போன்ற மெசேஜ் இது. அப்படிதான் பாகிஸ்தான் இன்றும் செய்தது. அதேபோல் முதல் பந்தில் இருந்தே பாகிஸ்தான் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தானின் சில பிளானிங் இந்திய அணியை குழப்பியது.

 வாசிம்

வாசிம்

உதாரணமாக ரோஹித் சர்மாவிற்கு தொடர்ந்து இன் ஸ்விங் போட்டனர். ரோஹித் சர்மா இதை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறி டக் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கே. எல் ராகுலுக்கும் இதேபோல் இன் ஸ்விங் பந்துகளை வீசி பாக் பவுலர்கள் அழுத்தம் கொடுத்தனர். அதேபோல் கோலி பேட்டிங் இறங்கிய போது வாசிம் உள்ளிட்ட ஸ்பின் பவுலர்களை கொடுத்து வந்து பாபர் அழுத்தம் கொடுத்தார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இன்று பாகிஸ்தான் எடுத்த விக்கெட்டில் சூர்யா குமார் யாதவ் விக்கெட் மட்டுமே இந்திய வீரர் ஒருவரின் தவறால் ஏற்பட்ட விக்கெட். சூர்யா குமார் சரியாக கணிக்காமல் அடித்த ஷார்ட் மூலம் விழுந்த விக்கெட். மற்றபடி ரோஹித், ராகுல், பண்ட் என்று எல்லோரையும் பாகிஸ்தான் திட்டமிட்டுதான் வீழ்த்தியது. பாகிஸ்தான் பவுலிங் இன்று பாராட்டும் அளவிற்கு இருந்தது.

பண்ட்

பண்ட்

அதிலும் பண்ட் பேட்டிங் செய்த போது முழுக்க முழுக்க லெக் சைடில் பீல்டிங் நிற்க வைத்து இருந்தனர். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்த போது கூட பாபர் முகத்தில் டென்ஷனை காட்டாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். பாகிஸ்தான் ஒரு பக்கம் சிறப்பான திட்டமிடல்.. இன்னொரு பக்கம் சிறப்பான மைண்ட் கேம் என்று இந்தியாவிற்கு எதிராக பக்கா பிளானிங்கோடு ஆடி உள்ளது.

English summary
T20 world cup: How Pakistan played mind game against India in today match?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X