துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த நொடியிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது.. பாக்.கிடம் படுதோல்வி அடைந்த இந்தியா.. சறுக்கியது எங்கே?

Google Oneindia Tamil News

துபாய்: இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அதிரடியாக வென்றுள்ளது. பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி இந்த போட்டியில் வென்றுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது.

இதுவரை 12 போட்டிகளில் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான் இன்று 13வது போட்டியில் வென்றுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்து உள்ளது.

பாகிஸ்தான் இதில் டாஸ் வென்ற நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது.

பாகிஸ்தான் பவுலிங்

பாகிஸ்தான் பவுலிங்

இதில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே பவுலிங்கில் ஆதிக்கம் காட்டியது. அதிலும் ஷகீன் அப்ரிடி 4 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்த 3 விக்கெட் எடுத்தார். ரோஹித் சர்மாவை தனது முதல் ஓவரிலேயே டக் அவுட்டில் வீழ்த்தினார். இன்னொரு பக்கம் கே எல் ராகுலும் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் இறங்கிய சூர்யா குமார் யாதவும் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பவுலிங் சிறப்பு

பவுலிங் சிறப்பு

இன்னொரு பக்கம் கோலி மட்டுமே கொஞ்சம் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார். 18.4 ஓவர் வரை ஆடிக்கொண்டு இருந்த கோலி வேகம் எடுப்பார், அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 49 பந்தில் 57 ரன்கள் எடுத்து இருந்தாலும் கூட தேவைப்பட வேண்டிய நேரத்தில் கோலி அவுட் ஆனார். டவுன் ஆர்டரில் பாண்டியா, ஜடேஜா ஆகியோரும் சரியாக ஆடாமல் சொதப்பியதால இந்தியா வெறும் 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாக் பிளான்

பாக் பிளான்

இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் நல்ல பிளானோடு களமிறங்கியது. பாகிஸ்தானின் பவுலிங் சிறப்பாக இருந்தது போலவே பீல்டிங் செட்டப்பும் நன்றாக இருந்தது. பண்ட்டிற்கும், கோலிக்கும் வைக்கப்பட்ட பீல்டிங் செட்டப் மிக சிறப்பாக அமைந்து இருந்தது. இதனால் மிடில் ஓவர்களில் ரன் அடித்த அளவிற்கு இந்தியாவால் டெத் ஓவர்களில் ரன் அடிக்க முடியவில்லை.

பேட்டிங்

பேட்டிங்

இன்னொரு பக்கம் பேட்டிங்கிலும் பாகிஸ்தான் அதிரடி காட்டியது. வருண் சக்ரவர்த்தி கஷ்டமான பவுலர் என்பதால் அவரின் முதல் ஓவரில் பெரிதாக அடிக்காமல் வெறும் 2 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. ஆனால் அதன்பின் அவர் வீசிய 13வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து அவரையும் பாகிஸ்தான் கலங்க வைத்தது. பவர் பிளேவிலேயே பாகிஸ்தான் அணி வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். பாகிஸ்தான் அணி பவர் பிளேவிலேயே வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

பவர் பிளே

பவர் பிளே

முதல் 6 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது. அந்த நொடியிலேயே பாகிஸ்தான் வெற்றிக்கு அருகில் வந்துவிட்டது. அதன்பின்பும் வேகம் குறையாத பாகிஸ்தானின் ஒப்பனர்கள் பாபர், ரிஸ்வான் இருவருமே சென்சிபிள் இன்னிங்ஸ் ஆடினார்கள். இந்திய அணியின் கேப்டன் கோலியும் மாறி மாறி வருண், ஜடேஜா, பும்ரா, ஷமி என்று பலரையும் மாறி மாறி பவுலிங் செய்ய வைத்தார்.

பவுலிங்

பவுலிங்

ஆனால் யார் பவுலிங் செய்தும் பாகிஸ்தான் ஒப்பனர்கள் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இதில் பாகிஸ்தான் ஒப்பனர்கள் பாபர், ரிஸ்வான் இரண்டு பேருமே அரைசதம் அடித்து இந்திய பவுலிங்கை துவம்சம் செய்தனர். பாபர் 68 ரன்கள், ரிஸ்வான் 79 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

English summary
T20 world cup: How did Pakistan win the match against India?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X