துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நிறவெறி".. கறுப்பின கோட்டாவிற்கு எதிர்ப்பு.. மண்டியிட மறுத்த டி காக்.. உண்மையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

துபாய்: நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டி காக் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்காத காரணத்தால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Recommended Video

    கறுப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட மறுத்த Quinton de K0ck.. ரசிகர்கள் கடும் விமர்சனம்

    கடந்த 2016ம் ஆண்டு கோலின் கேப்பர்னிக் என்ற அமெரிக்காவை சேர்ந்த கால்பந்து வீரர் மைதானத்தில் முட்டி போட்டு தொடங்கி வைத்துதான் இந்த "taking a knee" பிரச்சாரம் ஆகும். கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி, தாக்குதல்களை எதிர்த்து இந்த பிரச்சாரம் தொடங்கியது.

    அதன்பின் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட பின் இந்த பிரச்சாரம் தீவிரம் எடுத்தது. Black Lives Matter (பிஎல்எம்) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முட்டி போடும் நிகழ்வு நடந்து வருகிறது.

    IND vs PAK T20 கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறுIND vs PAK T20 கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு

    ஐசிசி

    ஐசிசி

    இந்த நிலையில்தான் பிஎல்எம் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகம் முழுக்க பெரிய விளையாட்டு போட்டிகளில் பல வீரர்கள் முட்டி போடுவது வழக்கம். ஐபிஎல் போட்டியில் கூட ஹர்திக் பாண்டியா இப்படி முட்டி போட்டார். இந்த நிலையில்தான் ஐசிசியின் பரிந்துரையின் பெயரில் தற்போது உலகக் கோப்பை டி 20 தொடரிலும் அனைத்து அணி வீரர்களும் முட்டி போட்டு வருகிறார்கள்.

    ஆஸ்திரேலியா மேட்ச்

    ஆஸ்திரேலியா மேட்ச்

    இந்திய வீரர்களும் கூட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படி மண்டியிட்டனர். இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் இப்படி மண்டியிட்ட போது சில வெள்ளை இன வீரர்கள் மண்டியிடவில்லை. இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் எல்லா வீரர்களும் கண்டிப்பாக அடுத்த போட்டியில் மண்டியிட்டு பிஎல்எம் பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    கண்டிப்பு

    கண்டிப்பு

    ஆனால் மூத்த வீரர் டி காக் மண்டியிட மறுத்து இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போதும் பிஎல்எம் பிரச்சாரத்தில் டி காக் பங்கேற்கவில்லை. இதையடுத்தே மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான நேற்று போட்டியில் கண்டிப்பாக டி காக் மண்டியிட வேண்டும் என்று உத்தரவு சென்றுள்ளது. மற்ற வெள்ளையின வீரர்களுக்கும் இதே உத்தரவு சென்றுள்ளது.

    நீக்கம்

    நீக்கம்

    ஆனால் அணி நிர்வாகம் சொல்லியும் கூட அவர் பிரச்சாரத்தில் பங்கேற்காதது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இதை காரணம் காட்டியே டி காக் ஆடும் அணியில் இருந்து நேற்று கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். முதலில் அணியில் சேர்க்கப்பட்டவர் பின்னர் கடைசி நேரத்தில் பிஎல்எம் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது என்று கூறி அணியில் இருந்து வெளியேறினார்.

    கோட்டா

    கோட்டா

    பிஎல்எம் பிரச்சாரத்தில் டி காக் பங்கேற்க மாட்டேன் என்று கூறியது சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களுக்கான கோட்டா உள்ளது. அதன்படி கறுப்பின வீரர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையில் 11 வீரர்களில் 6 பேர் கண்டிப்பாக கறுப்பின வீரர்களாக இருக்க வேண்டும். அதில் 2 பேர் கண்டிப்பாக ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட கறுப்பின வீரராக இருக்க வேண்டும்.

    நிறவெறியா?

    நிறவெறியா?

    இந்த கறுப்பின கோட்டாவிற்கு பல தென்னாப்பிரிக்க வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக வெள்ளையின வீரர்கள் தங்கள் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூறியுள்ளனர். டு பிளசிஸ் அணியில் இடம்பெறாமல் போனது கூட இந்த கோட்டாவால்தான் என்று கூறப்பட்டது.

    கோபம்

    கோபம்

    இந்த நிலையில் இந்த கோட்டா மீதான கோபம் காரணமாக டி காக் இப்படி செய்தாரோ என்ற கேள்வியும், சர்ச்சையும் எழுந்துள்ளது. அவர் மீது அணியின் சக வீரர்களே கோபமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. அணியில் இருக்கும் மற்ற கறுப்பின வீரர்கள் டி காக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    பொல்லார்ட் பதில்

    பொல்லார்ட் பதில்

    இந்த நிலையில்தான் டி காக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் பொல்லார்ட் இதை எதிர்த்து இருக்கிறார். எந்த ஒரு வீரரும் இப்படி பிஎல்எம் பிரச்சாரத்தை எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. முதல்முறை இப்படி கேள்விப்படுகிறேன். நாங்கள் தொடர்ந்து இந்த பிஎல்எம் பிரச்சாரத்தத்திற்கு குரல் கொடுப்போம். இது உரிமைக்கான குரல் என்று பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

    English summary
    T20 world cup: Why De Kock did not support taking knee campaign for Black Lives Matter? Why SA quota system on limelight now?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X