துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமீரகத்தின் முதல் அணு உலை.. எச்சரிக்கும் வல்லுநர்கள்.. கொதிக்கும் ஈரான், கத்தார்.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் கட்டி இருக்கும் பரக்கா அணுமின் நிலையம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் இது பதற்றத்தையும், பீதியையும் உருவாக்கி உள்ளது.

Recommended Video

    Barakah Nuclear Power Plantக்கு ஆதரவும் எதிர்ப்பும்! என்ன நடக்கிறது?

    மேற்கு நோக்கி செல்.. இந்த வாசகத்தை ஆசிய நாடுகள் ஒரு காலத்தில் தீவிரமாக கடைபிடித்தது. இந்தியா, சீனா என்று பல நாடுகளின் கலாச்சாரத்தில் மேற்கத்திய கலாச்சாரம் பெரிய அளவில் ஊடுருவியது. தற்போது மத்திய கிழக்கு நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி வருகிறது.

    முக்கியமாக சவுதி அரேபியா பெரிய அளவில் புரட்சிகளை செய்து மேற்கு நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. எண்ணெய் வளத்தை விட சுற்றுலா துறை மீது சவுதி அரேபியா அதிக கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. இதில் இப்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துள்ளது.

    மோடியுடன் சுந்தர் பிச்சை பேச்சு.. இந்தியாவில் கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு.. செம பிளான்! மோடியுடன் சுந்தர் பிச்சை பேச்சு.. இந்தியாவில் கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு.. செம பிளான்!

    விண்வெளி திட்டம் அனுப்பியது

    விண்வெளி திட்டம் அனுப்பியது

    ஐக்கிய அரபு அமீரகம் தனது கொள்கையை மாற்றி வருகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிட முடியும். முதல் உதாரணம், அமீரகம் அனுப்பிய ஹோப் விண்கலம். அமீரகத்தின் முதல் விண்வெளி திட்டமான இது தற்போது செவ்வாயை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் பெரிய அளவில் விண்வெளி திட்டத்தில் ஆர்வம் செலுத்தாத நிலையில் அமீரகம் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி திட்டம் மீது கவனம் செலுத்தி உள்ளது.

    அமீரகம் அணுமின் நிலையம்

    அமீரகம் அணுமின் நிலையம்

    இன்னொரு பக்கம் அமீரகம் கட்டி முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கும் அணுமின் நிலையம். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்து உள்ளீர்கள். எண்ணெய் வளம் அதிகம் இருக்கும் ஒரு நாடு, தற்போது அணுமின் நிலையத்தை கட்டி இருக்கிறது. அமீரகத்தின் முதல் அணுமின் திட்டம் இது என்று ஒரு வகையில் அந்த நாட்டு மக்கள் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் இது ஆபத்தின் அறிகுறி என்று சில விமர்சகர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

    தென் கொரியா கட்டியது

    தென் கொரியா கட்டியது

    கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றதுதான் இதுவும். ஆனால் தென் கொரியா தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்பட்டது. அதுவும் கத்தாருக்கு மிக அருகில் இந்த அணுமின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ரியாக்டர்கள் உள்ள நிலையில் ஒரு ரியாக்டர் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. பரக்கா அணுமின் நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையம் 3 வருடம் தாமதமாகவும், கூடுதல் பட்ஜெட் போடப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

    பரக்கா அணுமின் நிலையம் ஏன்?

    பரக்கா அணுமின் நிலையம் ஏன்?

    இந்த பரக்கா அணுமின் நிலையம் சர்ச்சைக்கு உள்ளாக நிறைய காரணங்கள் உள்ளது. முதல் காரணம் ஈரான். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஈரானுக்கும் சரியான உறவு இல்லை. அமெரிக்காவுடன் அமீரகம் நெருக்கமாக இருப்பதால் ஈரான் கோபத்தில் இருக்கிறது. இப்படிபட்ட தனது நாட்டில் அணு உலை கட்டுவது என்பது சட்டை பாக்கெட்டில் வெடி குண்டை வைத்துக் கொண்டு எதிரி வீட்டுக்கு தீபாவளி கொண்டாட செல்வது போன்றது என்கிறார்கள்.

    ஈரான் மோதல்

    ஈரான் மோதல்

    சின்ன போர், ஏவுகணை தாக்குதல் நடந்தால் கூட இந்த அணு உலை ஆபத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. ஈரான் மட்டுமில்லை, மத்திய கிழக்கில் இருக்கும் தீவிரவாத குழுக்கள் கூட இந்த அணு உலை மீது குறி வைக்கலாம். எப்போது எந்த நாடு எதிரியாக திரும்பும் என்று தெரியாத நிலையில் இப்படி ஒரு அணு உலையை தங்கள் நாட்டில் கட்டியது தவறு சிலர் எச்சரிக்கிறார்கள்.

    கவலை

    கவலை

    ஆனால் அணு விஞ்ஞானிகளின் கவலையே இதில் வேறாக இருக்கிறது. இந்த அணு உலையை தென் கொரியா சரியாக கட்டவில்லை. இதன் கூலண்ட் பகுதி சரியானதாக இல்லை. வெப்பநிலை கொஞ்சம் அதிகரித்தாலும் கூட இந்த அணு உலை தாங்காது. எப்போது வேண்டுமானாலும் இதன் கோர் பகுதி வெடிக்கலாம். அதோடு ஏரியல் ஏவுகணைகளை தாங்கும் வலிமையோடு இது கட்டப்படவில்லை.

    பெரிய புகார்

    பெரிய புகார்

    மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக ஏவுகணை தாக்குதல் நடக்கிறது. ஆனாலும் ஏவுகணையை எதிர்கொள்ளும் வலிமையோடு இதை கட்டவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இப்படி சுற்றுசூழல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நிறைய குறைபாடுகள், புகார்கள் இந்த பரக்கா அணுமின் நிலையம் மீது வைக்கப்பட்டு வருகிறது. இரண்டு எதிர்பார்க்காத எதிர்ப்புகளும் இந்த அணுமின் நிலையத்திற்கு எதிராக திரும்புகிறது.

    கத்தார் எதிர்ப்பு

    கத்தார் எதிர்ப்பு

    இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டதை கத்தார் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எங்கள் நாட்டு எல்லையில் ஏன் அணுமின் நிலையம் அமைத்தீர்கள் என்று கத்தார் குடைச்சல் கொடுத்து வருகிறது. இன்னொரு பக்கம் சவுதி அரேபியாவும் இதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய புயல் ஒன்றை இந்த பரக்கா அணுமின் நிலையம் ஏற்படுத்தி உள்ளது... மத்திய கிழக்கில் புதிய ரூட்டை பிடித்து இருக்கும் அமீரகம் இனி என்ன செய்ய போகிறது என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    The nuclear power plant in the UAE get support and oppose by experts amid its crisis with Qatar and Iran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X