துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாம் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு
துபாய் : துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாமில் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

துபாய் மாநகாராட்சியின் சார்பில் அல் வர்சன் பகுதியில் தூய்மைப் பணி சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் ராசல் கைமா பகுதியில் உள்ள இ.எஸ். குளோபல் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த நிறுவன ஊழியர்கள் 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அஹமது சுலைமான் தலைமை வகித்தார்.

இந்த குழுவினர் அதிகமான குப்பைகளை சேகரித்ததன் காரணமாக அந்த குழுவின் பொறுப்பாளர் அஹமது சுலைமானுக்கு மாநகராட்சி அதிகாரி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.


இதனால் அந்த குழுவினர் மிகவும் உற்சாகம் அடைந்தனர். தூய்மைப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அந்த நிறுவன அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.