உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள்! அமீரகத்தில் கேக் வெட்டி களைகட்டிய கொண்டாட்டம்!
துபாய்: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஐக்கிய அரபு அமீரகத் திமுகவினர் சார்பில் துபாயில் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத் திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளை தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

ரத்த தான முகாம், இலவச மருத்துவ முகாம், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு என பல்வேறு வகைகளில் தமிழகத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் களைக்கட்டி காணப்பட்டது.
இந்நிலையில் கடல் கடந்து தொழில் நிமித்தமாக வசித்து வரும் திமுகவினரும் உதயநிதி பிறந்தநாளை உற்சாகத்துக்கு குறைவின்றி கொண்டாடியுள்ளார்கள். அந்த வகையில் துபாயில் நடைபெற்ற உதயநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு எஸ்.எஸ்.மீரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனிடையே அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஏ.கே.எஸ்.விஜயன், கட்சிக்காக உதயநிதி ஆற்றி வரும் பணிகளை பாராட்டி பேசினார். அதேபோல் வரவேற்று பேசிய சரத்தையும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த கடையநல்லூர் முஸ்தபா, இளமுருகன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.
அடுத்த மாஸ்.. முதல்வர் ஸ்டாலின் 2வது நாள் பயணமாக இன்று அரியலூர் செல்கிறார்.. ரெடியாகும் புது திட்டம்
இந்நிகழ்ச்சியில் அமீரக திமுக பிரமுகர்கள் உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி பாலா, பருத்தி இக்பால், ஜலீல், ஏஜிஎம் பைரோஸ்கன், NRTIA கபீர், பிளாக் துலிப் செந்தில், கொரடாச்சேரி ஜாஹிர், பன்னீர்செல்வம் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு கட்சி மீதான தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.