துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காலவரையற்ற ஊரடங்கு.. சவுதியின் சில பகுதிகளில் லாக்டவுன்

Google Oneindia Tamil News

சவுதி: கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வருவதால் பொதுப் பகுதிகளில் கிருமி நீக்கம் உள்ளிட்ட சுத்தப்படுத்தும் பணிகள் செய்வதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. மேலும் சவூதி அரேபியா ஜெட்டாவின் சில பகுதிகளை லாக்டவுன் செய்துள்ளது.

Recommended Video

    உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு அமேசான் Ex- ஊழியரின் பொளேர் கேள்வி!

    முதன்முதலில் அரபு அமீரகத்தில் மார்ச் 26ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 5 வரை அது நீடிக்கப்பட்டது. இப்போது தேதி குறிப்பிடாமல் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    UAE Extends Coronavirus Curfew Indefinitely, Saudi Arabia Locks Down Parts of Jeddah

    தெருக்களில் கிருமி நாசினி தெளித்தல், பூங்காக்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் கிருமிநாசினி தெளிக்க வேண்டியிருப்பதால், இரவு 8 மணி முதல் இயங்குகிறது காலை 6 மணி வரை, மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனம் WAM வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தாமதமாகத்தான் இந்த செய்தி வெளியானது.

    "சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை தேசிய கிருமிநாசினி திட்டத்தின் தொடர்ச்சியை அறிவித்துள்ளன" என்று WAM செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்று அதில் சொல்லப்படவில்லை.

    ஏப்ரல் 1 முதல் கொரோனா வைரஸ் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அமீரக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியேறும்போது மக்கள் முகமூடி அணியுமாறு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைக்கிறது என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்!இப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்!

    சனிக்கிழமையன்று, கடந்த 24 மணி நேரத்தில் 241 நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 1,505 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10 ஆகவும் உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
    அண்டை நாடான சவுதி அரேபியாவில், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சனிக்கிழமை தொடங்கி ஜெட்டாவின் 7 சுற்றுப்புறங்களில் லாக்டவுன் மற்றும் ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சவுதி அரேபியாவில் சனிக்கிழமை வரை 2,179 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். 29 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The United Arab Emirates has extended a de facto overnight curfew indefinitely to disinfect public areas to fight the spread of coronavirus and Saudi Arabia has locked down parts of the Red Sea city of Jeddah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X