• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

துபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

|

துபாய்: துபாயில், கடந்த (10.05.19) வெள்ளிகிழமை அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் சார்பாக அபுஹைலில் உள்ள அப்ஜாத் கிராண்ட் ஹோட்டலில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

அவைத்தலைவர் புளியரை இசக்கி அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் துணை செயலாளர் சிவ பிரகாஷ் வரவேற்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக திமுக தலைவர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் அவர்கள் பேசும்போது மத ஒற்றுமையை ஏற்ப்டுத்த இது போன்ற மதநல்லிணக்க நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று‌ கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை படைத்த 'துபாய் ஃப்ரேம்' கட்டடம்... சிறப்புகள் என்னென்ன?

வைகோ

வைகோ

அதை தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்துல் ரஹ்மான் அவர்கள் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தன்னமலற்ற அரசியல் பாதையை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அடிமட்ட தொண்டனாக தன்னுடைய அரசியல் வாழ்வை தொடங்கிய அவரின் நாடாளுமன்ற வரலாற்றை நினைவு கூர்ந்தார்.

தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழர் மறுமலர்ச்சி பேரவை

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக வழிநடத்திய அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் வில்லிசேரி பாலாமுருகன் அவர்களுக்கு அமீரக திமுக சார்பாக துணை தலைவர்கள் சிம்மபாரதி,பிளாக் துளிப் செந்தில், செயலாளர்முஸ்தஃபா,ஏஜிஎம் பைரோஸ்கான்,உதயநிதி ஸ்டாலின் ரசிகர்மன்ற தலைவர் பாலா, USWA ஹரிஹரன் ஆகியோர் பொன்னாடை போத்தி கவுரவித்தனர்.

போனில் வாழ்த்திய வைகோ

போனில் வாழ்த்திய வைகோ

அரசியல் சூழலால் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தொலைப்பேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரிவித்திருந்தார் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ. சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையிலிருந்து வருகை புரிந்த ஜின்னாஹ் சர்புதீன் அவர்களும், அமீரக காங்கிரஸ் கட்சி செயலாளர் சம்சுதீன், காயிதே மில்லத் பேரவை அமீரக பொதுசெயலாளர் ஹமீதூர் ரஹ்மான், அமீரக தமமுக செயலாளர் அப்துல் ஹாதி, அமீரக மஜக செயலாளர் அப்துல் காதர்,அமீரக விசிக செயலாளர் அசோகன், அமீரக அமமுக செயலாளர் அப்துல் ரஹீம், SDPI கட்சி முபாரக், அமீரக தேமுதிக செயலாளர் கார்ல் மார்க்ஸ், அமீரக எழுத்தாளர் குழுமம் சார்பாக ஆசிப் மீரான், துபாய் தமிழ் அமைப்பு சார்பாக அஷ்ரப் அலி, ஃபா குரூப் சார்பாக ஹசீனா பர்வீன், அமீரக தமிழ் மக்கள் மன்ற பொதுசெயலாளர் பெர்தோஸ் பாட்சா, தமிழர் இளைஞர் கூட்டமைப்பு பிரபு, அய்மன் குரூப் அப்துல் ரசாக், சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி மொய்தீன், எழுத்தாளர் ஜெசிலா மற்றும் ரேடியோ கில்லி RJ அஞ்சனா அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நன்றியுரை

நன்றியுரை

பேரவை செயற்குழு உறுப்பினர்கள் தேவராஜ்,அமர்நாத், அரவிந்த் அலிஸ்டர், இளஞ்சூரியன், உமர் பாட்ஷா, துணை செயலாளர்கள் ஷாஜகான், சேவியர்,பொருளாளர் லெனின் ஜோஸ் முன்னிலை வகித்தனர். நிறைவாக அமீரகத் தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை செயலாளர் வில்லிசேரி பாலமுருகன் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

 
 
 
English summary
UAE Tamil Marumalarchi Peravai hosted Iftar recently in Dubai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X