துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐபிஎல்லில் இணைய போகும் அந்த 2 அணிகள் இவையா?.. விருப்பம் தெரிவித்த 2 "பிக்பாஸ்கள்".. செம பின்னணி!

Google Oneindia Tamil News

துபாய்: 2022 ஐபிஎல்லில் இணைய போகும் அந்த 2 அணிகள் எவை என்பது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதோடு மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் சிலர் அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

2022 ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளன. தற்போது இருக்கும் 8 அணிகளோடு மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடும் தொடராக ஐபிஎல் மாற்றப்பட உள்ளது. இதற்கான ஏலம் இந்த மாதம் 25ம் தேதி நடக்க உள்ளது.

இதற்கு முன்பே ஏலம் நடப்பதாக இருந்தது. ஆனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்ததால் இதற்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு ஏலம் விடும் தேதியும் 25க்கு தள்ளி வைக்கப்பட்டது.

மாற்றத்தை எதிர்பார்க்கும் மரக்காணம்.. திமுகவில் டென்சன்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை மாற்றத்தை எதிர்பார்க்கும் மரக்காணம்.. திமுகவில் டென்சன்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை

வாய்ப்பு

வாய்ப்பு

தற்போது வரை வெளியாகி இருக்கும் தகவலின்படி ஐபிஎல் 2022 தொடரில் புதிய அணிகள் இணைவதன் மூலம் பிசிசிஐ அமைப்பிற்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் பங்கு கொள்ள குறைந்தபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருட வருமானம் இருக்க வேண்டும். ஒரு அணியின் குறைந்த பட்ச ஏலத்தொகை 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

 ஐபிஎல் பரிசீலனை

ஐபிஎல் பரிசீலனை

இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்ப தொகையே 10 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அஹமதாபாத், லக்னோ, கட்டாக், கவுகாத்தி, ராஞ்சி, தர்மலா ஆகிய நகரங்களை இந்த ஏலத்திற்காக பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது. இதில் அஹமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு அணிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

யார் ஏலம் எடுப்பார்கள்?

யார் ஏலம் எடுப்பார்கள்?

இந்த நிலையில்தான் அதானி குழுமமும், மான்செஸ்டர் யுனைடட்கிளப் கால்பந்து அணியின் ஓனர்களான க்ளேசர் குடும்பமும் புதிய அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் புதிய அணிகள் ஏலம் விடப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அஹமதாபாத் அணியை அதானி குழுமமும், லக்னோ அணியை மான்செஸ்டர் யுனைடட் குழுமமும் வாங்க வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

    IPL 2022: Franchises allowed to retain 4 players | OneIndia Tamil
    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    இதுவரை வெளியான விவரங்களின் படி பின்வரும் நிறுவனங்கள், நபர்கள் புதிய அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    சஞ்சீவ் குமார் - ஆர்.பி.எஸ்.ஜி. (பழைய புனே அணி ஓனர்கள்)

    க்ளேசர் குடும்பம் - மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள்.

    அதானி குழுமம்

    நவீன் ஜிண்டால் - ஜிண்டால் பவர் & ஸ்டீல்.

    டோரண்ட் பார்மா.

    ரோனி ஸ்க்ரூவாலா.

    அரவிந்தர் மருந்தகம்.

    கோடக் குழு.

    சிவிசி பிரதர்ஸ்.

    சிங்கப்பூரை சேர்ந்த பிஇ நிறுவனம்.

    ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா

    ITW ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு ஆலோசனை அமைப்பு ஆகியோர் புதிய அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    English summary
    What will be two new teams in the IPL 2022 season?: All you need to know about the auction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X