• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதே தில், அதே ஸ்டைல்.. அப்படியே யுவராஜ் சிங்கை பார்த்த ஃபீல்.. பதற விட்ட படிக்கல்.. யார் இவர்?

|

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், அசப்பில் அப்படியே மற்றொரு யுவராஜ் சிங்கை போல காணப்படுகிறார்.

அவரது ஹை-லிப்ட் ஷாட், அஞ்சாத அதிரடி என அனைத்தும் யுவராஜ் சிங்கை மறுபடி ஆட்டக் களத்தில் பார்ப்பதை போல உள்ளது.

2003 உலக கோப்பையை யாரும் மறந்திருக்க முடியாது. யுவராஜ், கைஃப் எல்லோரும் அப்போது இளைஞர்கள்.. கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்த தொடரில் சக்கை போடு போட்டது.

கெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

2003 உலக கோப்பை

2003 உலக கோப்பை

பைனல் வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா. அந்த தொடரில், ஆஸ்திரேலியாவை தவிர வேறு எந்த அணிக்கு எதிராகவும் தோற்கவில்லை இந்தியா (லீக்கிலும்-பைனலிலும்). இந்தியாவில் ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான், நெஹ்ரா ஆகிய 3 வேகப் பந்து வீச்சாளர்களும் அத் தொடரில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

பேட்டிங் வரிசையும், சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட், யுவராஜ் என பலம் கொண்டதாக இருந்தது. ஆனால் யுவராஜ் அப்போது இளைஞர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஊடகங்கள் யுவராஜிடம் ஒரு கேள்வியை முன் வைத்தன. எல்லாம் சரி.. பாகிஸ்தான் அணியில் உள்ள வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தரை முதல் முறையாக நீங்கள் சந்திக்க போகிறீர்களே.. பயம் இல்லையா? என்பதுதான் அந்த கேள்வி.

யுவராஜ் சிங் vs அக்தர்

யுவராஜ் சிங் vs அக்தர்

"அவர்களும்தான் எனக்கு எதிராக இதுவரை பந்து வீசியது இல்லையே" என்று ஷார்ப்பாக ஒரு பதிலளித்தார் யுவராஜ். பேச்சில் மட்டும் தில் வெளிப்படவில்லை. களத்திலும் அது காணப்பட்டது. சச்சினை அக்தர் அவுட் செய்த அடுத்த பந்தை சந்தித்தது யுவராஜ்தான். சச்சினை வீழ்த்திய வெறியோடு, மணிக்கு 155 கி.மீ அளவுக்கான வேகத்தில் யார்க்கர் வீசினார் அக்தர். அஞ்சவில்லை யுவராஜ். அநாயாசமாக லெக் திசையில் பவுண்டரி விளாசினார். அந்த போட்டியில் இந்தியா எளிதாக வென்றது.

படிக்கல் தைரியம்

படிக்கல் தைரியம்

இன்று அதே தைரியத்தை, தேவ்தத் படிக்கல் பேட்டிங்கில் பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்காக துவக்க வீரராக முதல் முறையாக களம் கண்டார் படிக்கல். எதிர்முனையில் அனுபவ அதிரடி வீரர் பிஞ்ச் நின்றார். ஆனால், அதெல்லாம் படிக்கல் மனதை அச்சுறுத்தவில்லை. இயல்பாக பயமற்று ஆடினார். ஆனானப்பட்ட பிஞ்ச்சே மறுமுனையில் இவர் ஆட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. படிக்கல் அளவுக்கு அதிரடி காட்ட முடியவில்லை. 42 பந்துகளில், 8 பவுண்டரிகள் உதவியுடன், 56 ரன்கள் விளாசி அவுட்டானார் படிக்கல். ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே அரை செஞ்சுரி விளாசிவிட்டார் இந்த அசகாய சூரன்.

அப்படியே யுவராஜ் சிங்தான்

அப்படியே யுவராஜ் சிங்தான்

பேட்டை ஓங்கி ஷாட் அடிப்பது, உயரம், ஸ்பின்னர்கள் பந்தை ஸ்வீப் ஷாட் ஆடுவது என அனைத்திலும், அச்சு அசலாக யுவராஜ் சிங்கை நினைவூட்டும் படிக்கல், தைரியத்திலும் அதையே எதிரொலித்து அசத்தினார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த படிக்கல் 2கே கிட். ஆமாம்.. 2000ல் கேரளாவில் இருக்கும் எடப்பால் என்ற ஊரில் பிறந்தவர். அதன்பின் ஹைதராபாத் சென்று அங்கு வளர்ந்து பிறகு, பெங்களூரில் செட்டில் ஆனார். பெங்களூர் கர்நாடக கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்று 2014ல் இருந்து இவர் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.

படிக்கல் ரெக்கார்டு

படிக்கல் ரெக்கார்டு

விஜய் ஹசாரே டிராபி 2019/20 அதிக ரன் எடுத்தவர் படிக்கல்தான். 11 இன்னிங்சில் 609 ரன்கள். 67.66 சராசரி. சையது முஷ்தாக் அலி டிராபி 2019/20 - அதிக ரன் எடுத்தவரும் இவரே. 12 இன்னிங்ஸ், மொத்தம் 580 ரன்கள், 64.44 சராசரி, ஸ்ட்ரைக் ரேட் 175.75 ஆகும்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

புது யுவராஜ் சிங் பிறந்துவிட்டார் என்கிறார் இந்த நெட்டிசன்

பயமில்லை

பயமில்லை

படிக்கலுக்கு சிறப்பு திறமை உள்ளது. யுவராஜ் சிங்கை அவர் நினைவூட்டுகிறார். யுவராஜ் சிங் தனது இளமை காலத்தில், பவுலர்களை பயமின்றி அடிப்பதை இது நினைவுபடுத்துகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.

 
 
 
English summary
Who is Devdutt Padikkal? The RCB left hand batsman remainds Yuvraj Singh batting style.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X