துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்!

உலகின் விலை உயர்ந்த காலணி ஒன்று துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

துபாய்: உலகின் அதிக விலை காலணிகள் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகின் எந்த ஒரு மனிதனும் காலணிகள் அணியாமல் வெளியே செல்வது இல்லை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் காலணி அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது.

எனவே காலணி என்பது உடலின் ஆரோக்கியத்திற்கானது என்பதையும் தாண்டி, கௌரவத்தின், சாதி செருக்கின் அடையாளமாக பார்க்கப்பட்டது. உலகமயமாதலின் காரணமாக செருப்புகளும், ஷூக்களும் இன்று மலிவாகிவிட்டன.

இருப்பினும் பிராண்டட் ஷூ மற்றும் செருப்புகளின் மோகம் இன்றைய தலைமுறையினரை இன்னமும் ஆட்டிப்படைக்க தான் செய்கிறது. காஸ்ட்லியான ஷூ போட்டுக்கொண்டு நடந்து வரும் போது, இயல்பாகவே உள்ளங்காலில் இருந்து தலைக்கனம் தலைக்குமேல் ஏறும்.

மோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின் மோதல் ஓய்வதில்லை.. என் சவாலை ராமதாஸ் ஏற்றால் முரசொலி அலுவலக நில மூல ஆவணம் தருகிறேன்... ஸ்டாலின்

காஸ்ட்லி ஷூ

காஸ்ட்லி ஷூ

இந்த மாதிரி ஆட்களுக்காகவே காஸ்ட்லியான ஷூக்களை தயாரித்து வருகிறது மூன் ஸ்டார் எனும் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் உலகின் காஸ்ட்லியான ஷூவை துபாயில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தியது.

 அம்மாடியோவ்

அம்மாடியோவ்

அந்த ஷூவை பார்த்து அனைவரும் வாயடைத்து போய்விட்டனர். விலையை கேட்டால் நெஞ்சே அடைத்துவிடும். அந்த ஷூவின் விலை 19.9 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்புப்படி ரூ.1,41,47,00,950.00/-. அதாவது நூற்று நாற்பத்து ஒரு கோடியே 47 லட்சத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாய்.

தங்க செருப்பு

விலையை கேட்டவுடன் நெஞ்சடைத்து தலை சுற்றுகிறது அல்லவா. இந்த ஷூவில் அப்படி என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை தங்கமும், வைரமும் தான். இத்தாலிய டிசைனர் ஆண்டனியோ வியற்றி தயாரித்துள்ள இந்த ஷூவில், 30 கேரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. 1576 ஆம் ஆண்டு அர்ஜென்டீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் ஒன்றும் ஷூவில் உள்ளது. மேலும் இந்த ஷூ முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது.

 அழகு பார்க்கலாம்

அழகு பார்க்கலாம்

இந்த ஷூவை வாங்குவது என்பது உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் கூட தயங்கும் ஒரு விஷயம் தான். ஒருவேளை யாராவது இதை வாங்கினால் காலில் தானே போட வேண்டும். சாலையில் தானே நடக்க வேண்டும். ஒருவேளை கண்ணாடி பெட்டியில் வைத்து அழகுபார்த்தாலும் பார்க்கலாம். திருடர்கள் ஜாக்கிரதை.

English summary
The Moon Star Shoes come in at an eye-watering price of Dhs73 million ($19.9 million) and were revealed over the weekend in Dubai Marina on a Yacht.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X