கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வண்டியிலேயே குத்துப்பாட்டு.. ராத்திரியில் செய்த வேலை.. கவனித்த போலீஸ்.. இப்ப மன்னிப்பு வீடியோ!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மேக்சி கேப் வாகனத்தில் பாடல்களை ஒலிக்க விட்டு ஸ்டீரிங்கில் கால் வைத்து ஓட்டி நண்பர்களுடன் டிரைவர் சாகச பயணம் மேற்கொண்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Recommended Video

    வண்டி ஸ்டீரிங்கில் கால் வைத்து ஓட்டி சாகச பயணம்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்ட டிரைவர்

    போலீசாரின் அறிவுறுத்தலின் படி மற்றவர்களுக்கு அறிவுரை கூறி அந்த ஓட்டுனர் மன்னிப்பு வீடியோ வெளியிட்டார்

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவர் சொந்தமாக மேக்சி கேப் வாகனம் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்

    காலால் ஸ்டீரிங் சுழற்றினார்

    காலால் ஸ்டீரிங் சுழற்றினார்

    அவர் அந்த மேக்சி கேப் வாகனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் குத்து பாட்டை இசைக்கவிட்டு ஓட்டி வந்து வந்துள்ளார். பிரிட்டோ ஸ்டீரிங்கை காலால் சுழற்றி நண்பர்களுடன் போக்குவரத்து நெரிசல் நிறைந்த தக்கலை அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார. இதை உடன் இருந்த நண்பர் ஒருவர் செல்போணில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    ஆபத்தை உணரவில்லை

    ஆபத்தை உணரவில்லை

    அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதையடுத்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் சாகச பயணத்தில் ஈடுபட்ட பிரிட்டோ மீது தக்கலை போக்குவரத்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிரிட்டோ மீது வழக்கு

    பிரிட்டோ மீது வழக்கு

    இது குறித்த ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இதையடுத்து பிரிட்டோவை பிடித்து விசாரணை நடத்திய தக்கலை டி.எஸ்.பி ராமசந்திரன் அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

    யாரும் ஈடுபட வேண்டாம்

    யாரும் ஈடுபட வேண்டாம்

    இதன் பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் படி ஜான் பிரிட்டோ மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் கால்களை ஸ்டீரிங்கில் வைத்து வாகனத்தை ஓட்டியது தான் தான் என்று கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன் நடந்ததை பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும் கூறினார். இந்த செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும் யாரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வீடியோவில் பிரிட்டோ வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    kanyakumari driver biritto released apology video after thakkali police register case over his driving style in main road with heavy traffic
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X