எர்ணாகுளம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா!

கேரளா வாக்கு சாவடிக்குள் மழைநீர் புகுந்துவிட்டதால் சிரமம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Flood takes a toll on poll booths too

    எர்ணாகுளம்: ஐயா பாருங்க.. அம்மா பாருங்க.. இப்படி ஒரு தேர்தலை இதுக்கு முன்னாடி எங்காவது பார்த்திருக்கீங்களா.. அப்படி ஒரு காட்சி கேரளாவில் அரங்கேறியுள்ளது.

    கேரளாவின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. திருவனந்தபுத்தில் வட்டியூர்காவ், ஆலப்புழாவில் அரூர், பத்னம்திட்டாவில் கொன்னி, எர்ணாகுளம் மற்றும் மஞ்சேஸ்வரம் ஆகி ய இடங்களில்தான் இந்த இடைத்தேர்தல்கள் நடைபெற்ற வருகிறது.

    மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடிச்சு ஊத்திக்கிட்டு இருக்கிற மழையை பார்த்தால் இந்த வாக்கு சதவீதம் பதிவாகுமா என தெரியவில்லை.

    திண்டுக்கல் அருகே ரயில்வே சப்வே மீண்டும் கிணறானது... மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்!திண்டுக்கல் அருகே ரயில்வே சப்வே மீண்டும் கிணறானது... மேம்பாலத்துக்கு காத்திருக்கும் கிராமங்கள்!

    வரிசை

    வரிசை

    பலத்த மழை அந்த மாநிலத்தில் கொட்டி கொண்டு இருக்கிறது. ஆனாலும் மக்கள் குடையை பிடித்து கொண்டு காலையிலேயே ஜனநாயக கடமையாற்ற வந்து லைனில் ஓட்டு போட நின்றுவிட்டனர். அதிலும், மஞ்சேஸ்வரம் தவிர மற்ற தொகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    எர்ணாகுளம்

    எர்ணாகுளம்

    மொத்தம் 896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எர்ணாகுளத்தில் அய்யப்பன்கவு என்ற பகுதியில் உள்ள வாக்குசாவடியை நிலைமை ரொம்பவும் மோசமாக உள்ளது. அந்த சாவடிக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அந்த சாவடி மையத்தில் எல்லா பக்கமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    வேட்டி

    வேட்டி

    ஆண்கள் எல்லாம் பேன்ட்டை இழுத்து மடித்து விட்டுக் கொண்டு தண்ணீரிலேயே தாவி தாவி நடந்து போய் ஓட்டுபோகிறார்கள். பெண்கள் சுடிதார் போட்டிருந்தாலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. ஒருசில ஆண்கள் மட்டும் வசதியாக வேட்டியை தூக்கி மடித்து விட்டுக் கொண்டார்கள்.

    ஓட்டுப்பதிவு

    அந்த பூத்துக்குள் கரண்ட் இல்லை போல தெரிகிறது. ஒரே இருட்டாக இருக்கிறது. இது சம்பந்தமான அந்த பகுதியில் வாக்களிக்க சென்ற மக்களே இதை வீடியோ பிடித்து பதிவிட்டும் உள்ளனர். முடிந்தால் இந்த சாவடியில் மட்டும் ஓட்டுப்பதிவை தள்ளி வைக்க முடியுமா என்றும் வேண்டுகோள் விடுத்தும் பார்த்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிகிறது. பூத்துக்குள் நுழைந்து ஓட்டு போடுவதற்காக அந்த பகுதி மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருவதுதான் இந்த வீடியோவில் தெரிகிறது.

    English summary
    kerala by Election 2019: Rain water enters into the ayyappankavu election booth near ernakulam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X