ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா?.. செங்கோட்டையன் பதில்

Google Oneindia Tamil News

ஈரோடு: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் கோபியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

6 நாட்கள் இயங்கும்

6 நாட்கள் இயங்கும்

அமைச்சர் கூறுகையில். " கொரோனா வைரஸ் உள்ள காலத்தில்கூட துணிந்து, நேற்று (நேற்று முன்தினம்) பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகிறார்கள். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அழைக்கப்படுவார்கள். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும்.

சட்டமன்ற தேர்தல்

சட்டமன்ற தேர்தல்

மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி, பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாள்தோறும் ஆன்லைனில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான தேதி, அதற்கான அட்டவணை வெளியாகும். பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்..

நீட் தேர்வு

நீட் தேர்வு

இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'இந்த பாடத்திட்டங்களை படித்தால்தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும் என்றார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் 'பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.

English summary
The date of the 10th and 12th class public exams in Tamil Nadu will be announced after the announcement of the assembly elections, Education Minister Senkottayan told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X