ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதும்.. பேரன் பேத்தி வந்தாச்சு.. இனிமே 'அது' வேண்டாம்.. மறுத்த பெண்.. கொடூர கொலை!

பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் போலீசில் சரணடைந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காரில் கூட ஹெல்மெட் | செல்பி எடுத்த இளைஞர் பலி | கள்ளக்காதலி கொலை- வீடியோ

    தாராபுரம்: "பேரன், பேத்தி எடுத்தாச்சு, இனிமேல் 'அதுக்கு' வரமாட்டேன்" என்று மறுத்த பெண்ணை கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.

    தாராபுரம்-திருப்பூர் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழே போன மாசம் 25-ம் தேதி ஒரு பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி போட்டிருந்தார்கள்.

    போலீசார் விரைந்து அழுகிய நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு இது சம்பந்தமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    புரட்டி எடுத்த கஜா புயல்.. பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு! புரட்டி எடுத்த கஜா புயல்.. பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

    கொள்ளை முயற்சி இல்லை

    கொள்ளை முயற்சி இல்லை

    35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடம்பிலிருந்து தங்கத்தாலி, வளையல், தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால் அந்த பெண் யார், என்ன என்று உடனே தெரியவில்லை. நகைகள் எல்லாம் அப்படியே உடம்பில் இருப்பதால் கொள்ளை முயற்சிக்காக இந்த கொலை செய்யப்படவில்லை என தெரிந்தது.

    காட்டி கொடுத்த இன்ஷியல்

    காட்டி கொடுத்த இன்ஷியல்

    இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது. அத்துடன் பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருந்ததால் அதை வைத்தும் தனியாக விசாரணை நடத்தினர். அந்த தாலியை எடுத்து கொண்டு கவுந்தம்பாடி கடைவீதிகளில் விசாரிக்கப்பட்டது.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    அப்போது கிடைத்த தகவல்படி உயிரிழந்த பெண் முருகன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி என்று தெரியவந்தது. இந்த நிலையில்தான் முத்துலட்சுமியை கொலை செய்தோம் என்று 2 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தார்கள். தங்கள் பெயர் வேலுசாமி, குமரேசன் என்றார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் வேலுசாமி சொன்னதாவது:

    பேரன் - பேத்திகள்

    பேரன் - பேத்திகள்

    "எனக்கு 45 வயதாகிறது. என் மனைவியின் அக்காதான் முத்துலட்சுமி. முருகன் என்பவர்தான் முத்துலட்சுமியின் கணவர். ஆனால் எனக்கும் முத்துலட்சுமிக்கும் கள்ள உறவு ரொம்ப வருஷமாகவே இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லை என்பதால், முத்துலட்சுமியை உறவுக்கு கூப்பிட்டேன். ஆனால், அவரோ, பேரன் பேத்திகள் எடுத்தாச்சு. இனிமேலும் இதெல்லாம் என்னால் முடியாது என்று மறுத்தார்.

    இறுக்கி கொன்றேன்

    இறுக்கி கொன்றேன்

    அதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே என் அக்கா மகள் குமரேசனை கூப்பிட்டு, அவன் உதவியுடன் முத்துலட்சுமியை வேனில் கடத்தி சென்றேன். வழியில் திரும்பவும் உறவுக்கு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. முடியவே முடியாது என்று முத்துலட்சுமி என்னுடன் வாதம் செய்தார். அதனால் ஆத்திரம் அடைந்த நான் என் கழுத்தில் போட்டிருந்த துண்டு வைத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    உப்பாற்று பாலம்

    உப்பாற்று பாலம்

    என்னிடம் இருந்த சாக்கு பையில் அவரது உடலை கட்டி உப்பாற்று பாலத்தில் வீசிவிட்டேன். அதற்கு குமரேசனும் உதவியாக இருந்தார். எப்படியும் போலீசார் எங்களை பிடித்து விடுவார்கள் என்று தெரிந்ததால் நாங்களாகவே சரணடைந்தோம்" இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    English summary
    2 persons arrested for killing woman due to illegal relationship in Erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X