ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் சென்று வந்த 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஈரோட்டில் 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடை?

    தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 இஸ்லாமியர்கள் ஈரோடு கொல்லம்பாளையம் சுல்தான் பேட்டை மசூதியில் தங்கி, மத வழிபாட்டில் ஈடுபட்டனர். இவர்கள் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளுக்கு சென்று வந்தனர்.

    9 Streets locked due to coronavirus scare in Erode

    இதில், ஈரோட்டில் இருந்த தாய்லாந்து நாட்டினர் 2பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் அவர்கள் சென்று வந்த இடங்களிலும் கொரோனா பரவி இருக்கும் என கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டினர் வந்து சென்றதாக கூறப்பட்ட ஈரோடு புதுமஜித் வீதியில் உள்ள சின்ன பள்ளிவாசல் பகுதியில் இன்று காலை மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினிகளை தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    9 Streets locked due to coronavirus scare in Erode

    மேலும், சின்ன பள்ளிவாசல் சுற்றுப்புற பகுதியான புது மசூதி வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளிலும் போக்குவரத்திற்கு முழுமையாக தடை விதித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், இந்த 9 வீதிகளிலும் செயல்பட்டு வந்த மொத்த மளிகை வியாபார கடைகள், காலணி, அரிசி கடைகள் உள்ளிட்டவகளை மூட மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உத்தரவிட்டார்.

    காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம் காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்

    மேலும், கடைகளை திறந்தால் சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதன்பேரில், கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட 9 வீதிகளில் செயல்பட்ட அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டு காணப்பட்டன.

    English summary
    Following the confirmation of Corona to 2 Thai nationals in Erode, the corona may spread in the district wherever they went. Following this, the health department and the sanitation staff under the leadership of Municipal Commissioner Ilangovan took care of the sanitary work this morning in Erode.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X