• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஈரோடு அருகே தலையில் கல்லால் அடித்து இளைஞர் கொலை.. பகீர் காரணம்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கட்டிடத்தொழிலாளி தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 62). மனைவியை இழந்த கட்டிடத் தொழிலாளி செல்வன் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள தனது சம்பந்தி ஆறுமுகம் - காஞ்சனா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

கடந்த ஓராண்டாக இதே பகுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் செல்வன் இன்று காலை வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி பாதியில் நின்ற வீட்டில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அருகே கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல் ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது.

வானதி சொன்ன ஐடியா.. டாஸ்மாக் பக்கத்திலேயே தடுப்பூசி முகாம்கள்.. தமிழக அரசுக்கு வைத்த புது கோரிக்கைவானதி சொன்ன ஐடியா.. டாஸ்மாக் பக்கத்திலேயே தடுப்பூசி முகாம்கள்.. தமிழக அரசுக்கு வைத்த புது கோரிக்கை

தகவல்

தகவல்

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதுதொடர்பாக மேலும் தடயங்களை கண்டறிவதற்காக ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொழிலாளி தலையில் ஹாலோபிளாக் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெருங்கி பழகினர்

நெருங்கி பழகினர்

சேலம் அருகே கள்ளக்காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் கிருபைராஜ்(23). தனியார் ஆலை ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி (23) என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கொதித்த காதலன்

கொதித்த காதலன்

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கள்ளக்காதலி கலைமணியை சந்திக்கச் செல்லும்போது கிருபைராஜ், அவரது நண்பன் கலையரசனையும் உடன் அழைத்துச் செல்வார்.அப்போது கலையரசனுக்கும் கலைமணிக்கும் பழக்கம் ஏற்பட்டது.இதனால் நண்பர்களிடையே கலைமணியை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக் கொண்டனர்.

தகராறு

தகராறு

இதனால் நண்பர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று சேலம் குமரகிரி அருகே உள்ள மலைப் பகுதிக்கு கிருபைராஜுயும் , கலைமணியும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கலையரசன் இருவரையும் பார்த்து கோபமடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

அப்போது கிருபைராஜ் கலைமணியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதால் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் இதற்கு கலையரசன் மறுப்பு தெரிவித்து நான் கலைமணியை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.பிறகு மீண்டும் நண்பர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த கலையரசன் தான் இரண்டு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கிருபைராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

English summary
The incident where a construction worker was stoned to death near Sathyamangalam in Erode district has caused shock. Preliminary investigation has revealed that the murder took place due to fraud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X