ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹலோ கரும்பு குடுங்க பாஸு.. இன்னிக்கு எங்களுக்கு ஃபங்சன்! யானைகள் தினத்தில் லாரியை மறித்த யானைகள்!

Google Oneindia Tamil News

ஈரோடு : உலக யானைகள் தினமான இன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறைத்த யானை கூட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Recommended Video

    “கெளம்பு.. ஆனா அந்த கரும்பு கட்ட குடுத்துட்டு கெளம்பு” - கரும்பு லாரியை வழிமறித்த யானைகள்!

    மனிதர்கள் பழக்கப்படுத்தி வளர்க்கும் உயிரினங்களில் மிகவும் பிரம்மாண்டமானது என்றால் அது யானைகள் தான். ஆதி காலங்களில் இருந்தே யானைகளை பழக்கப்படுத்தி தங்கள் வேலைகளை செய்ய வைத்திருக்கிறார்கள் மனிதர்கள்.

    வன சூழியலைப் பொறுத்தவரை யானைகளின் பங்கு மகத்தானது. ஒரு யானைக் கூட்டம் ஒரு பகுதியை கடந்து செல்கிறது என்றால் அங்கு ஒரு வனப்பகுதி உருவாகிறது என்று அர்த்தம். அந்த அளவு யானைகள் வனவிலங்குகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    உ.பி., பீகார் குறித்து பேசுவோருக்கு.. இங்கே சமூகநீதி பெயரளவில் தான் உள்ளது..அண்ணாமலை குற்றச்சாட்டு! உ.பி., பீகார் குறித்து பேசுவோருக்கு.. இங்கே சமூகநீதி பெயரளவில் தான் உள்ளது..அண்ணாமலை குற்றச்சாட்டு!

    உலக யானைகள் தினம்

    உலக யானைகள் தினம்

    அந்த வகையில் யானைகளை பாதுகாப்பதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆன இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக யானைகள் தினமான இன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறைத்த யானை கூட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன.

    யானைக் கூட்டம்

    யானைக் கூட்டம்

    இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    கரும்பை தின்ற யானை

    கரும்பை தின்ற யானை

    இந்நிலையில் நேற்று மதியம் தமிழக கர்நாடக எல்லை காரப்பள்ளம் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையை குட்டியுன் யானை சாலை உலா வந்தது. அப்போது தாளவாடி இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானைகள் குட்டியுடன் வழிமறைத்தது அச்சம் அடைந்த ஓட்டுநர் லாரியை நிறுத்தினார் பின்னர் லாரியில் இருந்த கரும்பை யானை துதிக்கையால் எடுத்து தின்றது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகனங்கள் அனைத்தும் இரு புறமும் அணிவகுத்து நின்றன.

    யானைகள் தினம்

    யானைகள் தினம்

    பின்னர் ஓட்டுநர் லாரியின் மீது ஏறி கரும்புகளை சாலை ஓரத்தில் தூக்கி எறிந்தார். யானை குட்டியுடன் அந்த கரும்பை திங்க தொடங்கியது பின்னர் லாரி ஓட்டுநர் லாரியை எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரி இன்று யானைகள் தினம் என்பதால் யானைகள் ஸ்வீட் எடுத்துக் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

    English summary
    A herd of elephants blocked a sugarcane truck on the border of Tamil Nadu and Karnataka ; தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரியை வழிமறித்த யானை கூட்டம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X