ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூட்டை மூட்டையாக நாணயங்கள்! சிறு வயது ஏக்கத்தை சேமிப்பால் நிறைவேற்றிய இளைஞர்.. சொந்தமான கேடிஎம் பைக்

Google Oneindia Tamil News

ஈரோடு: பவானியைச் சேர்ந்து இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனக்குப் பிடித்த கேடிஎம் பைக்கை வாங்கிய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடையம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். பட்டதாரி இளைஞரான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார் .

சிறுவயது முதலே இவருக்கு உண்டியலில் காசு சேர்ப்பதில் ஆர்வம் இருந்துள்ளது.இந்த ஆர்வம் காரணமாக உண்டியலில் காசு சேர்ப்பதை இவர் பழக்கமாகவே கொண்டு இருந்தார்.

அசத்தும் இந்தியா.. உலகின் 3வது பெரிய பொருளாதார விரைவில் மாறும்.. ஆனந்த் மஹிந்திரா கணிப்புஅசத்தும் இந்தியா.. உலகின் 3வது பெரிய பொருளாதார விரைவில் மாறும்.. ஆனந்த் மஹிந்திரா கணிப்பு

சேமிப்பு

சேமிப்பு

சிறுவயதில் பள்ளிப்படிப்பின் போது தொடங்கிய இந்த பழக்கம் இப்போது கல்லூரி படிப்பு வரை தொடர்ந்து இருக்கிறது. மேலும் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் உணவகங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதில்லை என்று கிளம்பிய பிரச்சனை இருந்த நிலையில், தொடர்ச்சியாக பத்து ரூபாய் நாணயங்களையும் அவர் வாங்கி சேர்த்து வந்துள்ளார்.

3.5 லட்சம்

3.5 லட்சம்

இவருக்குச் சிறு வயது முதலே இரு சக்கர சொகுசு வாகனத்தில் ஆர்வம் இருந்து வந்து உள்ளது. இந்த ஆர்வம் காரணமாகவே அவர் சிறுவயது முதலே உண்டியல் மூலம் சேர்த்து வந்துள்ளார். இப்போது பைக் வாங்கச் சரியான நேரமாக இருக்கும் எனக் கருதிய இவர், சமீபத்தில் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்து உள்ளார். அதில் மொத்தம் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் தொகை சேர்ந்திருப்பது தெரியவந்தது. மற்ற நாணயங்களையும் அவர் 10 ரூபாய் நாணயமாக மாற்றி உள்ளார்.

சாக்கு மூட்டை

சாக்கு மூட்டை

அதை அப்படியே சாக்கு மூட்டையில் போட்டுக்கொண்ட அவர், அதை மாருதி வேன் மூலம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருக்கும் கேடிஎம் ஷோரூமிற்கு எடுத்துச் சென்று உள்ளார். மொத்தம் ஆறு மூட்டைகளில் அவர் காசை எடுத்து வந்துள்ளார். அதில் அத்தனையும் பத்து ரூபாய் காசுகள் இருந்து உள்ளது. மொத்தம் 3.5 லட்சம் ரூபாயையும் இப்படி சில்லறையாக எடுத்து வந்ததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சற்று மிரண்டுவிட்டனர்.

எண்ணி முடிக்க 6 பேர்

எண்ணி முடிக்க 6 பேர்

அதேநேரம் இளைஞரிடம் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அந்த சில்லறை காசுகளை வாங்கிக் கொண்டு வண்டியைத் தரச் சம்மதம் தெரிவித்து உள்ளனர். மொத்தம் ஆறு ஊழியர்களைக் கொண்டு மூட்டையில் இருக்கும் பத்து ரூபாய் நாணயங்களைக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்து மொத்தமாக எண்ணத் தொடங்கினர். இறுதியில் மூட்டையில் இருந்த 3.50 லட்ச ரூபாயை இருந்ததை எண்ணி முடிந்தனர்.

கேடிஎம் பைக்

கேடிஎம் பைக்

எண்ணி முடிக்கும் போது, நிறுவனத்தின் வளாகம் பத்து ரூபாய் நாணயங்கள் தான் வரிசையாக இருந்தது. ஒரு வரிசைக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பல வரிசைகளில் பத்து ரூபாய் நாணயங்களை அடுக்கி இருந்தனர். பணம் சரியாக இருந்ததைத் தொடர்ந்து அவர் விரும்பிய கேடிஎம் 360 பைக்கை வாங்கி உள்ளார். மேலும், கேடிஎம் என்று வரிசையும் 10 ரூபாயை அடுக்கி அதை ஃபோட்டோவாகவும் எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இப்போது சென்னையைத் தாண்டி பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் காசை வாங்கக் கடைக்காரர்கள் மறுக்கும் நிலையில், 3.5 லட்ச ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் மூலம் வாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது. உண்டியல்கள் மூலம் காசு சேர்க்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதாலேயே இதைச் செய்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்து உள்ளார்.

English summary
With 10 rs coin A Youth buys his favorite bike: Erode youth create awareness about 10 rs coins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X