ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்

செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர்.... கேமிராக்களை பிடிங்கி உடைத்ததால் பரபரப்பு...

    ஈரோடு: "யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. சொன்னா கேக்க மாட்டே" என்று செய்தியாளர்களின் செல்போனை பிடுங்கியதுடன் அவர்களை தாக்கி உள்ளார் ஈரோடு எம்எல்ஏவின் மகன்!

    ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசுப் பள்ளியில், தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கேவி ராமலிங்கம், ஈரோடு கிழக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர்.

    அப்போது முன்னாள் மாணவர்கள், லேப்டாப் வழங்காததைக் கண்டித்து எம்எல்ஏக்களை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை

    முற்றுகை

    மாணவர்களை எம்எல்ஏக்கள் சமாதானப்படுத்தியும் முடியவில்லை. அவர்களை வெளியேவும் செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் எம்எல்ஏக்கள் ரெண்டு பேரும் கிளாஸ் ரூமில் போய் உட்கார்ந்து கொண்டனர். அங்கேயும் மாணவர்கள் போய் முற்றுகையிட்டு விட்டனர்.

    மறியல்

    மறியல்

    'ஓசியில் கொடுக்கிற லேப்டாப்புக்கு இவ்ளோ பிரச்னை பண்றீங்களே" என்று எம்எல்ஏ தென்னரசு மாணவர்களை மிரட்டி இருக்கிறார். போலீசார் ஏராளமானோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். மறியல் செய்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    ரத்தன் பிரித்வி

    ரத்தன் பிரித்வி

    இவை அனைத்தையும் அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர். ஆனால் செல்போனில், கேமராவில் எதையும் வீடியோ எடுக்கக்கூடாது என்று எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி செய்தியாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மிரட்டல்

    மிரட்டல்

    "யோவ்... வீடியோ எடுக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா?"என்று செய்தியாளர்களின் சட்டையை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அத்துடன் காலால் எட்டி உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். உங்க முன்னாடியே இப்படி நடக்குதே என்று செய்தியாளர்கள் சொல்லியும் எம்எல்ஏக்கள் தரப்பு அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

    விசாரணை

    விசாரணை

    எம்எல்ஏ மகன் தாக்கியதில், இந்து தமிழ் நாளிதழ் செய்தியாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜூனியர் விகடன் செய்தியாளர் நவீன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இது சம்பந்தமாக போலீசில் புகார் தந்துள்ளனர்.

    English summary
    AIADMK MLAs son attack the Media person in Govt Free Laptop issue in Erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X