ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார்டா அது.. அசையாமல் இருந்த உருவம்.. அருகில் சென்ற 2 பேர்.. அலறி அடித்து ஓட்டம்

தூங்கி கொண்டிருந்த கரடியை 2 இளைஞர்கள் எழுப்ப முயன்றனர்

Google Oneindia Tamil News

ஈரோடு: "அது என்ன.. அசையாமல் இருக்கிறதே" என்று அருகில் சென்ற இளைஞர்கள் அலறி கொண்டு ஓடினார்கள்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன... இதில் யானை, மான், கரடி உள்ளிட்டவை அந்த காட்டுப்பகுதி வழியாக வெளியே வந்து, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்வது வழக்கம்.

Bear movement in Bannari road near erode, viral video

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே பைக்கில் 2 இளைஞர்கள் வந்தனர்.. காட்டோரம் இருந்த அந்த ரோட்டு பகுதியில் ஒரு உருவம் படுத்து கிடந்தது.. அது என்னவென்று பார்க்க பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தனர்.

கிட்ட வந்தபிறகுதான் தெரிந்தது அது கரடி என்று.. ஆனால் அது உயிருடன் இருக்கிறதா என தெரியவில்லை.. அசையாமல் படுத்திருக்கவும் கொஞ்ச நேரம் அப்படியே நின்று கவனித்தனர்.. லேசாக மூச்சு விட்டது தெரிந்தது.. நல்ல தூக்கத்தில் இருந்தது அந்த கரடி.. உடனே 2 பேரும் செல்போனில் அதை வீடியோ எடுத்துகொண்டனர்.. வளைத்து வளைத்து போட்டோவும் எடுத்தனர்.

குளிக்கும்போது வீடியோ.. குளிக்கும்போது வீடியோ..

கரடி நன்றாக தூங்கவும் 2 பேருக்கும் பயமே இல்லை.. ஒரு கட்டத்தில் இளைஞர்களுக்கு தைரியம் வந்துவிட்டது.. அதனால் அமைதியாக தூங்கி கொண்டிருந்த கரடியை எழுப்ப ஆம்பித்தனர.. சத்தமாக கத்தினர்.. பைக்கை ஸ்டார்ட் செய்து, ஹார்ன் அடித்து கொண்டே இருந்தனர்.. கரடி திடீரென அலறி எழுந்தது.. ஆனால் 2 பேரையும் பார்த்துவிட்டு திரும்பவும் தூங்க ஆரம்பித்துவிட்டது.

இளைஞர்கள் மறுபடியும் கரடியை எழுப்ப பார்த்தனர்.. ஆனால் கரடி அவர்களை கண்டுகொள்ளவே இல்லை.. வெறுத்து போன 2 பேரும், கரடியை எழுப்ப முடியாமல், கடைசியில் பைக் எடுத்து கொண்டு கிளம்பி சென்றுவிட்டனர். இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

English summary
Bear movement in Bannari road near erode, viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X