12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் அந்த ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை 105 அடி உயரமும் 32 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணை மேட்டூர் அணைக்கு அடுத்த 2-ஆவது மிகப் பெரிய அணையாக பாவிக்கப்படுகிறது.

இதன் மூலம் திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2.50 லட்சம் ஏரிகள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, கேரளத்தின் வடக்கு பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. அக்டோபர் மாதத்தில் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும் என்பதால் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
சங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்!
நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. கடந்த 2007-ஆம் ஆண்டுக்குபின் பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அத்தோடு 12 ஆண்டுகள் கழித்து அணை முழு கொள்ளளவை எட்டியது.
அணையின் நீர் மட்டம் 104.50 அடியை எட்டியது. வினாடிக்கு 7.502 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர் உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!