ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

Google Oneindia Tamil News

ஈரோடு: 7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சரியான நேரத்தில் சீருடை வழங்க இயலவில்லை என்றார்.

Bio metric method from 6th to 8th grade Says Minister Sengottaiyan

பள்ளிக்கல்வித்துறை பல்வேறு துறைகளை சார்ந்திருப்பதால் தாமதங்கள் ஏற்படுவதாகவும் இவ்வார இறுதிக்குள் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீருடைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும். தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் எனறும், மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி எனவும் தெரிவித்தார்.

ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.

முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்பட உள்ள அறிவிப்புகள், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும். 12 ஆண்டுக்கு பிறகு, 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1, 6, 9,11 ஆகிய 4 வகுப்புகளுக்கு பாட மாற்றம் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் பள்ளிகள் ஜூன் 3ல் திறக்கப்பட்டது.

பாடப்புத்தகங்களை தயாரித்த நிபுணர் குழு தொடர்ந்து இயங்கும் எனவும், இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப பாடப்புத்தகங்களில் தேவையான மாற்றங்களை இந்த குழு ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

English summary
Minister Sengottaiyan Said that Bio metric method from 6th to 8th grade
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X