ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.. போலீசுக்கு வந்த அந்த போன் கால்.. ஈரோட்டில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவர் போலீசுக்கு போன் செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க தீபாவளியை முன்னிட்டு.. பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புதிய உடை எடுக்கவும், பலகாரங்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் கடைத்தெருக்களில் அதிக அளவில் கூடி வருகிறது.

இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால்.. கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு

இந்த நிலையில் ஈரோட்டில் இருக்கும் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் ஒருவர் போலீசுக்கு போன் செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் இருக்கும் பன்னீர் செல்வம் பூங்கா, மணிகூண்டு , ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல இடங்களில் குண்டு வைத்து இருப்பதாக போன் வந்துள்ளது.

 போலீஸ்

போலீஸ்

ஈரோடு போலீசாருக்கு நேற்று இரவு இந்த போன் கால் வந்துள்ளது. போன் செய்த நபர் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகும். அதிலும் தீபாவளி நேரம் என்பதால் இங்கு அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.

என்ன செய்தனர்

என்ன செய்தனர்

இந்த மர்ம நபரின் போன் காலை தொடர்ந்து, ஈரோடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் களமிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மர்ம போன் கால் காரணமாக தீபாவளி நேரத்தில் மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பதற்றம்

பதற்றம்

மர்ம நபரை தற்போது போலீசார் டிரேஸ் செய்து வருகிறார்கள். போன் எண்ணை வைத்து போலீசார் இவரை தேடி வருகிறார்கள். இன்று மாலைக்குள் இந்த மர்ம நபர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது, இந்த வெடிகுண்டு மிரட்டல் பெரும்பாலும் பொய்யான மிரட்டலாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

English summary
Bomb threat was given to many places in Erode during Deepavali time yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X