ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதான் சொன்னோம்ல.. கேட்டீங்களா.. ஆம்புலன்ஸில் வந்து லீவு கேட்டு அதிர வைத்த ஊழியர்!

ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் கொடுத்து சென்றுள்ளார் பஸ் ஊழியர் ஒருவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆம்புலன்ஸில் வந்து லீவு கேட்டு அதிர வைத்த ஊழியர்!-வீடியோ

    ஈரோடு: உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் காஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாபு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 வருடமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில், பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரை குடும்பத்தார், முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    லீவு கேட்டார்

    லீவு கேட்டார்

    அங்கு அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மலர்கொடி சென்னிமலை போக்குவரத்து கழகத்தின் மண்டல ஆபீசில் உள்ள கிளை மேலாளருக்கு போன் செய்து தகவலை சொன்னார். ஆஸ்பத்திரியில் கணவனை சேர்த்துள்ளதால், அவருக்கு லீவு வேண்டும் என்று கேட்டார்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    ஆனால் அதற்கு கிளை மேலாளர் ஒத்து கொள்ளவே இல்லை. கணவரின் நிலைமையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காததால், என்ன செய்வதென்று மலர்கொடி விழித்தார். பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பாபுவை, ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் ஏற்றினார்.

    அதிர்ந்தனர்

    அதிர்ந்தனர்

    பாபு ஆம்புலன்சில் படுத்து கிடக்க, அவர் பக்கத்தில் மலர்கொடி மகனுடன் ஏறி உட்கார்ந்துகொண்டார். ஆம்புலன்ஸை போக்குவரத்து அலுவலகத்து செல்லுமாறு சொன்னார். டிரான்ஸ்போர்ட் ஆபீசுக்குள் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட எல்லோரும் அதிர்ந்தார்கள்.

    கையோடு லீவு லட்டர்

    கையோடு லீவு லட்டர்

    பின்னர் ஆம்புலன்சில் பாபு வருவதை பார்த்து மேலும் ஷாக் ஆனார்கள். அப்போது பாபு மலர்கொடியை துணைக்கு அழைத்து சென்று கிளை மேலாளர் அறைக்கு சென்றார். கையோடு தான் கொண்டு வந்த விடுமுறை கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் ஆம்புலன்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அதிகாரிகள் கெடுபிடி காரணமாக, லீவு கிடைக்காததால், குடும்பத்துடன் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் கொடுத்துவிட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    TN Govt transport bus driver came by Ambulance to requesting leave his higher authorities near Erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X