ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவினர் சும்மா இருந்தாலே போதும்.. பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.. முதல்வர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்: திமுகவினர் அமைதியாக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சத்தியமங்கலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர, மக்கள் மீது அக்கறை இல்லை. திமுகவினர் அமைதியாக இருந்தாலே பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

காலில் விழுந்து வாக்கு கேட்க சொன்ன அமைச்சர், அப்படியே செய்த பூந்தமல்லி அதிமுக வேட்பாளர்! காலில் விழுந்து வாக்கு கேட்க சொன்ன அமைச்சர், அப்படியே செய்த பூந்தமல்லி அதிமுக வேட்பாளர்!

 முதல்வர் பிரச்சாரம்

முதல்வர் பிரச்சாரம்

சிறுமுகை-காவிலிபாளையம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இதுபோல் நீலகிரி லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்தார்.

தரமான சிகிச்சை

தரமான சிகிச்சை

அப்போது அவர் கூறுகையில் கொடநாடு விவகாரத்தில் எனக்கு தொடர்பிருப்பதாக ஸ்டாலின் பச்சை பொய் கூறுகிறார். திமுக தலைவராக கருணாநிதியே இருந்தால், தன்னால் தலைவராக முடியாது என நினைத்து அவருக்கு தரமான சிகிச்சைகள் அளிக்கவில்லை.

பதவி கிடைக்காமல்

பதவி கிடைக்காமல்

2 ஆண்டுகளாக வீட்டிலேயே வைத்திருந்தார். கருணாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்தால் தனக்கு பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தால் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

விசாரணை

விசாரணை

கருணாநிதியை வீட்டில் வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக அரசு உரிய விசாரணை நடத்தும் என முதல்வர் தெரிவித்தார்.

English summary
CM Edappadi Palanisamy in Satyamangalam says that if DMK cadres will be silent, then women will be safe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X