ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    ஈரோடு: பதவி ஆசை காரணமாகவே தேனி தொகுதியில் போட்டியிட்டதாகவும், என்னதான் இருந்தாலும் ஈரோட்டில் இருந்து அங்கு சென்றது தவறு என தாம் நினைப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியதால் வேறுவழியின்றி தேனியில் இளங்கோவன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பவாருக்கு எதிரான ரூ.70,000 கோடி ஊழல் வழக்கை மூட முயற்சி.. உச்சநீதிமன்றம் செல்கிறது சிவசேனா அஜித் பவாருக்கு எதிரான ரூ.70,000 கோடி ஊழல் வழக்கை மூட முயற்சி.. உச்சநீதிமன்றம் செல்கிறது சிவசேனா

    ஈரோடு டூ தேனி

    ஈரோடு டூ தேனி

    பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான நடவடிக்கையே காரணம் எனக் கூறி காங்கிரஸ் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொந்த ஊரான ஈரோட்டை விட்டுவிட்டு தேனியில் போட்டியிட்டதை தவறு என இப்போது உணர்வதாக கூறினார்.

    ஓட்டுக்கு 2,000

    ஓட்டுக்கு 2,000

    தேனி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத், ஒரு ஒட்டுக்கு ரூ.2,000 கொடுத்து 200 கோடி ரூபாய் வரை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார் என விமர்சித்தார். மேலும், ஈரோட்டில் சீட் கிடைக்காததை அடுத்து தாம் அமைதியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் தேனிக்கு சென்று தவறு செய்துவிட்டதாக பேசினார்.

    சாடல்

    சாடல்

    மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை மொத்தமாக சீர்குலைத்துவிட்டதாகவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸை தவிர வேறு யாரும் பேசுவதில்லை எனத் தெரிவித்தார். மேலும், பொருளாதாரம் மட்டுமல்லாமல் ஜனநாயகமும் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    விரைவில் முடிவு

    விரைவில் முடிவு

    மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டது என்பதற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும், ஆனால் மக்கள் அவர்களது செயல்பாடுகளை கவனித்து விரைவில் நல்ல முடிவை தருவார்கள் எனவும் தெரிவித்தார்.

    English summary
    Congress senior leader evks elangovan says, i went to Theni because of the post
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X