ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்த 4 பேர்.. ஈரோட்டில் திடீர் கைது.. தீவிர விசாரணை!

ஈரோட்டிற்கு கடந்த மார்ச் மாதம் வந்த தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்ததாக கூறி நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டிற்கு கடந்த மார்ச் மாதம் வந்த தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்ததாக கூறி நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Recommended Video

    Erode Corona : தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்தவர்கள் கைது

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் 480 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான விசாரணை கேட்கும் இந்தியா கொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான விசாரணை கேட்கும் இந்தியா

    டெல்லி மாநாடு

    டெல்லி மாநாடு

    தமிழகத்தில் தொடக்கத்தில் கொரோனா பரவ டெல்லி மாநாடும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. டெல்லி மாநாடு சென்று தமிழகம் வந்த சில பேர் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியது. ஆனால் டெல்லி மாநாடு சென்ற எல்லோரும் மொத்தமாக தமிழகத்தில் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர். இதனால் அவர்கள் மூலம் பெரிய அளவில் கொரோனா கேஸ்கள் பரவவில்லை. அதோடு டெல்லி மாநாடு மூலம் சமூக பரவலும் ஏற்படவில்லை.

    தாய்லாந்து பயணிகள்

    தாய்லாந்து பயணிகள்

    டெல்லி மாநாடு சென்ற தாய்லாந்து பயணிகள் பலர் தமிழகம் வந்தனர். முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் பலர் தங்கி இருந்தனர். இவர்கள் மூலம் கொங்கு மாவட்டங்களில் சிலருக்கு கொரோனா வந்தது. ஈரோட்டிலும் இதன் மூலம் சிலருக்கு கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தாய்லாந்து பயணிகளுக்கு உதவிய நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் தமிழகம் வந்தது ஏன் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மத ரீதியான கூட்டம்

    மத ரீதியான கூட்டம்

    இந்த தாய்லாந்து பயணிகள் தமிழகத்தில் மத கூட்டம் நடத்த அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் அவர்கள் மத கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வரவில்லை என்கிறார்கள். இதனால் தாய்லாந்து பயணிகளை தமிழகத்தில் தங்க வைத்த நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இந்த தாய்லாந்து பயணிகளின் விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. விசா விதிமுறையை மீறிவிட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வீடு கொடுத்த சிலர்

    வீடு கொடுத்த சிலர்

    தற்போது இவர்களுக்கு வீடு கொடுத்து உதவிய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோட்டில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். அதன்படி தாய்லாந்து நாட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்து உதவியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கைது செய்யப்பட்டனர்

    கைது செய்யப்பட்டனர்

    இவர்கள் மீது 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரம்பட்டி காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதேபோல் அண்டை ஊர்களில் சிலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் கொங்கு மாவட்டங்களில் தாய்லாந்து பயணிகளுக்கு இடம் கொடுத்த சிலர் கைதாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் விசாரணை முடுக்கிவிடப்படும் என்றும் போலீசார் தரப்பு தெரிவிக்கிறது.

    English summary
    Coronavirus: 4 People arrested in Erode for helping Thailand travelers last month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X