ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியுயார்க், காசர்கோடு போல மாறலாம்.. ஈரோடுதான் கவலையளிக்கிறது.. தமிழகத்தின் கொரோனா எபி-சென்டர்!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு தமிழகத்தில் கொரோனா பரவலின் மையமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

    இதில் சென்னையில் அதிகமாக 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு அடுத்து ஈரோட்டில் அதிகமாக 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு நிலை

    ஈரோடு நிலை

    ஈரோட்டில் கொரோனா வேகமாக பரவி வருவது கொஞ்சம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் ஐந்தாவது கேஸ் ஈரோட்டில்தான் ஏற்பட்டது. அங்கு 75 வயது நபர், ஐஆர்டி மெடிக்கல் கலோரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து இவர் ஈரோடு வந்துள்ளார். இவருக்கு கொரோனா ஏற்பட்டது . அதேபோல் 6வது கேஸ் அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஆவார். இவர்கள் இருவரும் முதல் கட்டமாக 13 பேருடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் புதிய கேஸ்

    தமிழகத்தில் புதிய கேஸ்

    அதன்பின் தமிழகத்தில் பதிவான 26வது கேஸ் ஈரோட்டில் இருந்தது வந்தது. தாய்லாந்து பயணிகள் மூலம் கடந்த 25ம் தேதி இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன்பின் நோயாளிகள் கேஸ் எண் 47, 48, 49, 50 ஆகிய நபர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. தாய்லாந்து பயணிகள் உடன் நேரடியாக நெருக்கமாக தொடர்பு ஈரோட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள இந்த 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

    சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    இதனால் இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பின் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட கேஸ் எண் 56 முதல் 65வது நோயாளிகள் வரை 10 பேருக்கு ஈரோட்டில் இருந்து கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இவர்கள் எல்லோரும் நேரடியாக தாய்லாந்து பயணிகள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்கு நேரடியாக அவர்கள் மூலம் கொரோனா பரவி உள்ளது.

    மொத்தம் 17 பேர்

    மொத்தம் 17 பேர்

    இந்த 17 பேரை தொடர்பு கொண்ட மீதம் இருக்கும் 2 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் ஈரோட்டில் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஈரோட்டில் மட்டும் இதனால் 890 பேர் கொரோனா காரணமாக வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். இதில் 20 பேருக்கு மட்டும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த 17 பேரை தொடர்பு கொண்ட மீதம் இருக்கும் 2 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் ஈரோட்டில் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஈரோட்டில் மட்டும் இதனால் 890 பேர் கொரோனா காரணமாக வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். இதில் 20 பேருக்கு மட்டும் கொரோனா தொடர்பான அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது. இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

    சென்னையிலும் அதிக பேர்

    சென்னையிலும் அதிக பேர்

    ஈரோட்டை விட சென்னையில்தான் அதிகமாக 24 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் பாதிக்கப்பட்ட 24 பேரில் 21 பேருக்கு ஸ்டேஜ் 1 மூலம் கொரோனா ஏற்பட்டது. அதாவது இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நேரடியாக சென்னை வந்தவர்கள். மீதம் உள்ள 3 பேருக்கு, ஸ்டேஜ் 2. அதாவது கொரோனா பாதித்த உறவினர்கள் மூலம் இவர்களுக்கு கொரோனா பரவியது.

    ஈரோடு வித்தியாசம்

    ஈரோடு வித்தியாசம்

    ஆனால் ஈரோட்டில் நிலை அப்படி இல்லை. அங்கு 2 பேரை தவிர எல்லோரும் ஸ்டேஜ் 2. ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட 19ல் 17 பேரும் தாய்லாந்து நபர்களை சந்தித்தவர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களின் மீட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் மூலம் வைரஸ் பரவி உள்ளது. இந்த நபர்கள் மூலம் ஈரோட்டில் மேலும் கொரோனா பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நியுயார்க்கில் இப்படித்தான் கொரோனா தீவிரமாக பரவியது.

    நியூயார்க் எப்படி?

    நியூயார்க் எப்படி?

    அமெரிக்காவில் நியூயார்க் கொரோனா பரவலின் மையமாக (epicenter) பார்க்கப்படுகிறது. அதேபோல் கேரளாவில் காசர்கோடு கொரோனா பரவலின் மையமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நியூயார்க்கில் 67,325 பேருக்கு
    கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் காசர்கோட்டில் 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் கொத்து, கொத்தாக கொரோனா பரவி உள்ளது. இது க்ளஸ்டர் பரவல் என்று கூறுவார்கள்.

    க்ளஸ்டர் பரவல் எப்படி

    க்ளஸ்டர் பரவல் எப்படி

    தற்போது ஈரோட்டில் அதேபோல்தான் க்ளஸ்டர் பரவல் மூலம் கொரோனா பரவி வருகிறது. அங்கு இன்னும் கொரோனா வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது ஈரோட்டில் மாவட்டம் முழுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தமிழகத்தில் கொரோனா பரவலின் மையமாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது.

    English summary
    Coronavirus: Erode becoming the epicenter in Tamilnadu, Just like Newyork and Kasargodu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X