ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம குட் நியூஸ்.. ஒரே வாரத்தில் 64 பேர் டிஸ்சார்ஜ்.. இன்னும் 4 பேர்தான்.. கொரோனாவை வெல்லும் ஈரோடு!

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈரோடு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

Google Oneindia Tamil News

ஈரோடு: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈரோடு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அங்கு இன்னும் 4 பேர் மட்டும்தான் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தொடக்கத்தில் கொரோனா காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்றால், அது ஈரோடுதான். அங்கு வெகு வேகமாக கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஈரோட்டில் முதல் கேஸ் கடந்த மாதம் 21ம் தேதிதான் பதிவானது. தமிழகத்தில் அதுதான் ஐந்தாவது கொரோனா கேஸ்.

அந்த முதியவர் ஐஆர்டி மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் டெல்லியில் இருந்து ஈரோடு வந்துள்ளார். இவருக்கு கொரோனா ஏற்பட்டது. பின் அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டது.

அதிகரித்தது

அதிகரித்தது

சரி இரண்டு கேஸ்கள்தான் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது வேக வேகமாக வரிசையாக நிறைய கேஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. நிறைய பேர் அடுத்தடுத்து கொரோனா காரணமாக பாதிக்க தொடங்கினார்கள். ஈரோட்டில் வேகமாக ஸ்டேஜ் 2 கேஸ்கள் ஏற்பட தொடங்கியது. கொரோனா பாதித்த அந்த இரண்டு பேரை தொடர்பு கொண்டதன் மூலம் பலருக்கும் கொரோனா ஏற்பட்டது.

யார் எல்லாம் பாதிக்கப்பட்டனர்

யார் எல்லாம் பாதிக்கப்பட்டனர்

தமிழகத்தில் பதிவான 26வது கேஸ் ஈரோட்டில் இருந்து வந்தது.

கேஸ் எண் 47, 48, 49, 50 ஆகிய நபர்களுக்கு ஈரோட்டில் இருந்துதான் கொரோனா ஏற்பட்டது.

கேஸ் எண் 56 முதல் 65வது வரை 10 பேருக்கு ஈரோட்டில்தான் கொரோனா ஏற்பட்டது.

அதன்பின் ஈரோட்டில் கொரோனா கொஞ்சமாக கொரோனா வேகம் குறைய தொடங்கியது. சுமார் ஒரு வாரத்திற்கு ஈரோட்டில் கொரோனா ஏற்படாமல் இருந்தது. ஆனால் மீண்டும் ஈரோட்டில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.

வேகமாக அதிகரித்தது

வேகமாக அதிகரித்தது

அதே சமயம் இன்னொரு பக்கம் கொரோனாவில் இருந்து ஈரோடு வேகமாக மீண்டும் கொண்டே இருந்தது. நோயாளிகள் வரிசையாக குணமடைந்த வண்ணம் இருந்தனர்.ஆனால் இன்னொரு பக்கம் கேஸ்களும் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்படி கடந்த 9ம் தேதி ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா கேஸ்கள் ஏற்பட்டது. இதன் மூலம் ஈரோட்டில் மொத்தம் 70 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆனால் குணமடையையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

குணம் அடைந்தனர்

குணம் அடைந்தனர்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஈரோட்டில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இவர்கள் குணப்படுத்தப்பட்டு, அதன்பின் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின் நேற்று மேலும் 28 பேர் குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வேகம் எடுக்கும் ஈரோடு

வேகம் எடுக்கும் ஈரோடு

மொத்தம் 14 ஆண்கள், 14 பெண்கள் என 28 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 4 பேர் ஏற்கனவே குணப்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் இரண்டு முறை ஈரோடு சாதனை படைத்துள்ளது. ஈரோட்டில் 64 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். 2 தாய்லாந்து பயணிகள் போலீஸ் கண்காணிப்பில் தனியாக சிகிச்சை பெறுகிறார்கள்.

இன்னும் 4 பேர்

இன்னும் 4 பேர்

இதனால் இன்னும் 4 பேர் மட்டும்தான் ஈரோட்டில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு கடந்த ஒரு வாரமாக ஒரு கேஸ் கூட இல்லை. இதனால் மொத்தமாக கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் 2 - 3 நாட்களில் ஈரோடு விடுபடும் என்று கூறுகிறார்கள். உலகம் முழுக்க , இந்தியா முழுக்க கொரோனா அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வெளிச்சம் தந்துள்ளது.

தமிழகம் நிலை என்ன

தமிழகம் நிலை என்ன

தமிழகத்தில் 1629 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் 662 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 949 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக மருத்துவர்களின் திறமையை இது காட்டுகிறது. அதிகமான நோயாளிகளை குணப்படுத்துவதில் ஈரோடு, கரூர் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.

English summary
Coronavirus: Erode has only 4 more patients, all others discharged in the district successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X