ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெபம் செய்ய போறேன்.. சுகம் தர போறேன்.. "குட்டி யானை"யில் வலம் வந்த ராணி.. மடக்கி பிடித்த போலீஸ்!

ஜெபக்கூட்டம் நடத்த முயன்ற போலீஸ்காரர் மனைவி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஜெபக்கூட்டம் நடத்துவதற்காகவே குட்டியானையில் வலம் வந்துள்ளார் ராணி.. கொரோனாவை ஒழிக்க கூட்டு ஜெபம் நடத்தி பாட்டு பாடிக் கொண்டு வந்த இவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இவர் ஒரு போலீஸ்காரர் மனைவி என்பதுதான் விஷயமே!

Recommended Video

    ஜெபம் செய்ய போறேன்.. சுகம் தர போறேன்.. 'குட்டி யானை'யில் வலம் வந்த ராணி.. மடக்கி பிடித்த போலீஸ்!

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது குறிச்சி வாய்க்கால்மேடு பகுதி.. இங்கு மேசிய என்ற பெயரில் ஜெப வீடு நடத்தி வருபவர் ராணி.. இவர் செல்லிக் கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை.

    இவரது கணவர் ஜெயராமன், பர்கூர் ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இப்போது ஸ்கூல்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன.

    கொரோனா

    கொரோனா

    இந்நிலையில் ஜெபம் செய்தே கொரோனாவை ஒழிக்கிறேன் என்று ராணி முடிவு செய்தார். இதற்காக டாட்டா ஏஸ் வண்டியை எடுத்து கொண்டு, அதில் கூட்டு ஜெபம் நடத்த கிளம்பினார்.. பெரிய குரும்ப பாளையம் காலனிக்குள் குட்டியானை சென்றது. கூடவே டிரம்ஸ், மேளம், என ஜெப பாடல்கள் ஒலித்தன.. ஜெப கோஷ்டி சத்தமாக ஊருக்குள் நுழைந்ததுமே மக்கள் கடுப்பாகி விட்டனர்.

    ராணி

    ராணி

    அதனால் அந்த வண்டியை தடுத்து நிறுத்தினர்.. குட்டியானைக்குள் 10-க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்திருந்தனர். அவர்களை பார்த்த மக்கள், 144 தடை இருக்கே, சமூக விலகலும் இல்லாமல் இப்படி மொத்தமாக கிளம்பி வண்டியில் வரலாமா? என்று ராணியிடம் வாக்குவாதம் செய்தனர்... உடனே ராணி, இந்த ஊருக்குள் ஒரு குடும்பத்தில் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதனால் ஜெபம் செய்து சுகம் தரபோவதாக சொன்னார்..

    சரக்கு வண்டி

    சரக்கு வண்டி

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தான் ஒரு போலீஸ்காரர் மனைவி என்று கெத்தாகவும், பிடிவாதமாகவும் பேசினார் ராணி. இதையடுத்து மக்கள் ஈரோடு எஸ்பிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டனர். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பவானி போலீசார் அங்கு வந்தனர்.. சரக்கு வண்டியுடன் ராணி உட்பட அனைவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

    கைது

    கைது

    தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்த சென்ற ராணி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மத பிரச்சாரத்திற்கு கூட்டத்தை அழைத்து சென்ற ராணி, டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தனர்.. குட்டி யானையையும் பறிமுதல் செய்தனர். கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜெபத்தினால் குணப்படுத்த முயன்ற இந்த சம்பவம் பவானி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    coronavirus: policeman wife who tried to conduct the prayer meeting was arrested near erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X