ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்!

ஆட்டோ டிரைவர் சிவாஜி அடுத்தவர் காசில் டீ குடிக்க மாட்டாராம்.

Google Oneindia Tamil News

ஈரோடு: "சார்.. நான் அடுத்தவங்க காசில் காபி, டீ குடிக்க மாட்டேன்" என்று ஒரு பிரின்சிபலோடு வாழ்கிறவராம் ஆட்டோ டிரைவர் சிவாஜி.. புரியல? கோடு போட்டு வாழ்றவராம்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சொக்கலிங்கம். இவர் ஒரு தகவலை நம்மிடம் பரிமாறி கொண்டுள்ளார்.

Devakottai School HM says that, Erode Auto Driver Sivaji lives with good morals and principles

அதன் விவரம் இதுதான்: "ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம் பார்த்து விட்டு பஸ் ஸ்டேண்டுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறினோம். அந்த ஆட்டோக்காரர் பெயர் சிவாஜி.

மற்ற ஆட்டோக்காரரிடம் பஸ் ஸ்டேண்ட் போகணும் என்று சொன்னதற்கு 100 ரூபாய் கேட்டார்கள், ஆனால் சிவாஜி, வெறும் 60 ரூபாய் என்று நியாயமாக கேட்கவும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

ஆட்டோ போய் கொண்டே இருந்தது. போற வழியில் நல்ல காபி கடை இருந்தால் நிறுத்துப்பா என்று சொன்னோம். அது மாதிரியே டீ கடையில் நிறுத்திவிட்டு, இங்க பில்டர் காபி நல்லா இருக்கும். போய் சாப்பிட்டு வாங்க. நான் வண்டியிலேயே இருக்கேன் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றார்.

எஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன் எஞ்சாமிய்யா ராமு.. எப்படியாவது கண்டுபுடிங்க.. வினோத அறிவிப்புடன் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய முருகன்

ஆனால் எங்களுக்குதான் டிரைவரை விட்டுட்டு காபி குடிக்க மனசு இல்லை. அதனால கூட வந்து காபி குடிக்குமாறு சொன்னோம். அதற்கு டிரைவர் சிவாஜி, "சரி சார்.. வந்து காபி குடிக்கிறேன். ஆனால் என் காசில்தான் குடிப்பேன். அடுத்தவங்க காசில் டீ, காபி குடிக்கிறது இல்லை" என்றார். இப்படி அவர் சொன்னது எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது.

காபி குடித்து முடித்ததும், எங்களை பஸ் ஸ்டேண்டில் கொண்டு போய்விட்டு விட்டார். 60 ரூபாய் பணம் கேட்டதற்கு பதிலாக நான் 70 ரூபாய் தந்தேன். ஆனால் சிவாஜி 10 ரூபாய் திருப்பி என்கிட்டயே தந்துட்டார். அவருக்கு ஒரு வாழ்த்தை சொல்லிவிட்டு, மறக்காமல் அவர் செல்போன் நம்பர் வேண்டும் என்று கேட்டு வாங்கி வைத்து கொண்டேன்" என்றார்.

English summary
Devakottai School HM says that, Erode Auto Driver Sivaji lives with good morals and principles
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X